- Advertisement -
Homeபொழுதுபோக்குகடல் தாண்டியும் தெறிக்கவிடும் லியோ.. அந்த 1000 கோடி ரூபாயை எடுத்து வைங்கப்பா.. மாஸ் காட்டும்...

கடல் தாண்டியும் தெறிக்கவிடும் லியோ.. அந்த 1000 கோடி ரூபாயை எடுத்து வைங்கப்பா.. மாஸ் காட்டும் விஜய்

- Advertisement -

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கின. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி அப்ளாஸ் அள்ளும்படி ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.

அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது. இருந்தாலும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக லியோ படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும். வசூல் சாதனைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிடும் என தளபதி ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

படம் வெளியாக இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்ளிட்டோர் கொடுக்கும் பேட்டிகளிலும் லியோ படம் பற்றிய ஹைப் உச்சக்கட்டமாக ஏறியிருக்கிறது. படமும் இதுவரை 450 கோடி ரூபாய்வரை பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் படத்துக்கான ப்ரீ புக்கிங் நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கலாம்.

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.அதாவது அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் லிஒயொ திரைப்படம் வியாழக்கிழமை ரிலீஸாகவுள்ளது. அதற்கான முதல் நாள் காட்சிக்கு மட்டும் இப்போதுவரை 35,000 டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலியேவில் 20,000 டிக்கெட்டுக்களுக்கும் மேல் புக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல்தான் இங்கிலாந்திலும் ப்ரீ புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்தில் 10,000 டிக்கெட்டுக்கள் புக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் விஜய்க்கு எவ்வளவு மாஸ் இருக்கிறது என்பதை என சொல்லிவருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்துக்கு கிடைக்காத சிறப்பு காட்சிக்கான அனுமதி லியோ படத்துக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரிலீஸ் நாள் அன்று லியோ திரைப்படம் மொத்தம் 5 காட்சிகள் திரையிடப்படும். இதன் காரணமாக முதல் நாளே வசூல் சாதனையை லியோ நிகழ்த்திவிடுவது உறுதி என கூறும் ரசிகர்கள் அந்த 1000 கோடி வசூல் ரெக்கார்ட லியோ பேர்ல எழுதுங்கோ என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்