- Advertisement -
Homeபொழுதுபோக்கு"உங்கள உள்ள விட்டதுக்கு என்ன பண்ண முடியமோ"... அத பண்ணிட்டீங்க.... பிரபல திரையரங்கை சூறையாடிய விஜய்...

“உங்கள உள்ள விட்டதுக்கு என்ன பண்ண முடியமோ”… அத பண்ணிட்டீங்க…. பிரபல திரையரங்கை சூறையாடிய விஜய் விசிறிகள்… இதுதான் உங்கள் கொண்டாட்டமா?

- Advertisement -

திரையுலகில் இன்னும் ஒரு மாதத்திற்கு ஹாட் டாபிக் எதுவென்றால், அது நிச்சயம் லியோ படத்தை பற்றியாகத்தான் இருக்கும். ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை எடுத்திருப்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், ட்ரைலர் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அவர்களின் பொறுமையை சோதித்து பார்த்த படக்குழு, காலையில் இருந்து மௌனம் காத்து வந்தது. எதிர்பாராத நேரத்தில் த்ரிஷா போஸ்டர் வெளியாகி, ட்ரைலர் மீதான ஹைப்பை கூட்டியது.

- Advertisement -

போஸ்டரில் கத்தியில் இருந்து வழிந்தோடும் ரத்தத்தை பார்த்து த்ரிஷா பதற்றத்தில் இருப்பதுபோல் இருந்தது. இதன்மூலமே லோகேஷ் என்னமோ வைத்திருக்கிறார் என ரசிகர்கள் பேசி வந்தனர். காலையில் இருந்து லியோ பட டாபிக்கே இணையத்தில் ஓடி கொண்டிருக்க, மாலை 6.30 மணிக்கு ட்ரைலர் வெளியானது.

ஆரம்ப காட்சியிலேயே காஷ்மீரை காட்ட, விஜய்யின் வாய்ஸ் ஓவரோடு டிரைலர் தொடங்கப்பட்டது. சீரியல் கில்லர் கதையை விஜய் கூற, ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அறிமுகமாகின்றன. ட்ரைலரை பார்க்கும்போது, காஷ்மீரில் தனது மனைவியுடன் நிம்மதியான வாழ்க்கையை பார்த்தி என்னும் பெயரில் வாழ்கிறார் விஜய். ஆனால் அவரை தேடி ரவுடி கும்பல் வந்து கொண்டே இருக்கிறது. அத்தனைக்கு பதில் கூறி ஒதுங்கி வாழும் விஜய், ஒரு கட்டத்தில் பொங்கி எழுவது போல் காட்சி இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் லியோவாக ஊரையே கலக்கிய விஜய், எல்லாவற்றிலும் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் இருப்பதுபோல் படம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

- Advertisement -

ட்ரைலரை பொருத்தவரை ஒவ்வொரு காட்சியிலும் லோகேஷ் பார்த்து பார்த்து உழைத்திருப்பது நன்றாக தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்கும் படத்தில், விஜய் கெட்ட வார்த்தை பேசுவது டிரைலரிலேயே வந்திருப்பது முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.இந்நிலையில் ட்ரைலர் ரிலீசாவதற்கு முன்பாகவே, சென்னை ரோகிணி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். ஏற்கனவே அங்கு திரையரங்கு வளாகத்தில் ட்ரைலரை ஒளிபரப்ப காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரைலர் ஒளிபரப்பும் சில நிமிடங்களுக்கு முன்பு திரையரங்குகளுக்குள் நுழைந்த அவர்கள், கொண்டாட்டத்தின் எல்லைக்கே சென்றனர். இதில் எல்லை மீறிய ரசிகர்கள், அங்கிருந்த இருக்கைகளை அடித்து நொறுக்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருக்கைகள் சேதமடைந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்