- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் 2, 3 தியேட்டர்களில்தான் லியோ டிரெய்லர் காட்டப்பட்டது, அதற்கும் ரசிகர்களின் பிரஷ்ஷர்தான் காரணம்...

தமிழ்நாட்டில் 2, 3 தியேட்டர்களில்தான் லியோ டிரெய்லர் காட்டப்பட்டது, அதற்கும் ரசிகர்களின் பிரஷ்ஷர்தான் காரணம் – திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம்

- Advertisement -

கடந்த 5ம் தேதி விஜய் நடித்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. வரும் 19ம் தேதி லியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. லியோ இசை விழா கடந்த 30ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில், திடீரென இசைவிழா நடக்காது என அறிவிக்கப்பட்டது. இதனால், லியோ டிரெய்லர் வெளியீட்டை, விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர்.

லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டதாகவும், தியேட்டர் முன்பகுதிகளில் பெரிய டிஜிட்டல் பேனல் போர்டு வைத்து, டிரெய்லரை ரசிகர்கள் கூட்டத்தின் முன் காட்டவும் முதலில் பேசப்பட்டது. ஆனால், தியேட்டர்களின் முன் ரசிகர்கள் கூட்டம் திரண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அதற்கு பர்மிசன் கிடைக்கவில்லை.

குறிப்பிட்ட நாளில், மாலை 6.30 மணிக்கு லியோ டிரெய்லர் வெளியானது. ரசிகர்களும் டிரெய்லரை பார்த்து, உற்சாகமடைந்தனர். இதுவரை சமூக வலைதளங்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, லியோ டிரெய்லர் சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டு, ரசிகர்களின் வெறியாட்டத்தால் தியேட்டர் சூறையாடப்பட்டது. சீட்டுகள் அடித்து, கிழித்து உடைக்கப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் சேதமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இவ்வாறு அனுமதியின்றி டிரெய்லரை திரையிட்ட தியேட்டர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியதாக நேற்று தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டில் மொத்தம் 1,168 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில், இரண்டு அல்லது மூன்று தியேட்டர்களில் மட்டுமே லியோ டிரெய்லர் திரையிடப்பட்டுள்ளது. மற்றபடி, நிறைய தியேட்டர்களில் டிரெய்லர் திரையிடப்பட்டதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். அது சிறிதும் உண்மையல்ல.

திருப்பூரில், என்னுடைய தியேட்டரில் கூட லியோ டிரெய்லரை திரையிட்டதாக பொய்யான தகவலை, சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, தியேட்டர்களுக்கு டிரெய்லர் அனுப்பப்படும். அப்போது மட்டுமே டிரெய்லர் முறைப்படி திரையிடப்படும்.அதுதான் நடைமுறை. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 தியேட்டர்களில் மட்டுமே லியோ டிரெய்லர் காட்டப்பட்டுள்ளது. அதற்கும், விஜய் ரசிகர்களின் பிரஷ்ஷர்தான் காரணம் என்று கூறி இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

சற்று முன்