- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து திரைக்கு வரும் ரி ரிலீஸ் படங்கள் - இனி 1980 - 90 காலக்கட்டத்தை...

அடுத்தடுத்து திரைக்கு வரும் ரி ரிலீஸ் படங்கள் – இனி 1980 – 90 காலக்கட்டத்தை திரையரங்குகளில் கொண்டாட தயாரான ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு நல்ல படைப்பு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கொண்டாடப்படுகிறது. அந்த படைப்பின் வெற்றியை காலம் தீர்மானிப்பதே இல்லை. நல்ல கலையின் அம்சமாக அந்த படத்தை எல்லா காலத்திலும் ரசிகர்கள் கொண்டாட தயாராக இருக்கின்றனர். அதனால் தான் 40 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் இப்போதும் டிவி சேனல்களில் அடிக்கடி ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

எங்க வீட்டுப்பிள்ளை கர்ணன் நாடோடி மன்னன் காதலிக்க நேரமில்லை அன்பே வா ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி புதிய பறவை தில்லானா மோகனாம்பாள் ஆண்பாவம் முதல் மரியாதை முள்ளும் மலரும் வாழ்வே மாயம் மூன்றாம் பிறை இப்படி ஏகப்பட்ட படங்களை அந்த லிஸ்ட்டில் சொல்லிக்கொண்டே போகலாம்.

- Advertisement -

அதிலும் கே பாக்யராஜ் பாரதிராஜா பாலு மகேந்திரா இயக்கிய படங்கள் எல்லாம் இப்போதைய ஜென்ஸி ரசிகர்களும் ரசிக்கும் அளவுக்கு ஒரு சிறந்த படங்களாக இருக்கின்றன. தாவணிக்கனவுகள் கிழக்கு சீமையிலே மௌன கீதங்கள் முந்தானை முடிச்சு சின்னக்கவுண்டர் எஜமான் விருமாண்டி என பல படங்கள் உள்ளன.

அதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரி ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெரிய ஆதரவும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் படையப்பா கில்லி முத்து ஆளவந்தான் 3 சச்சின் போன்ற பல படங்கள் வெளியாகி நல்ல வசூலை பெற்றன. கடைசியாக 23ம் தேதி வெளியான மங்காத்தா படமும் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படங்களை மீண்டும் திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர். இனி தொடர்ந்து பல படங்கள் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏனெனில் இன்றைய புதிய படங்கள் கமர்ஷியல் என்ற பெயரில் காட்டு மொக்கை படங்களாக இருப்பதால் கதையம்சம் காமெடி பாடல்கள் நிறைந்த அந்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வரிசையில் சிலம்பரசன் சினேகா நடித்த சிலம்பாட்டம் மாதவன் ரீமாசென் நடித்த மின்னலே சத்யராஜ் கஸ்தூரி நடித்த அமைதிப்படை விஜய் சங்கீதா நடித்த பூவே உனக்காக டி ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக நடித்த உயிருள்ளவரை உஷா போன்ற பல படங்கள் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இது எல்லாமே கடந்த 1980 90 காலகட்டத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்