- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவிடம் பாடகராக வாய்ப்பு கேட்ட நடிகர், அவமானத்தில் அழுத லிவிங்ஸ்டன், நேரில் பார்த்த கே பாக்யராஜ்...

இளையராஜாவிடம் பாடகராக வாய்ப்பு கேட்ட நடிகர், அவமானத்தில் அழுத லிவிங்ஸ்டன், நேரில் பார்த்த கே பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் சொல்லாமலே என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பல படங்களில் வில்லனாகவும் சமீபகாலமாக ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் லிவிங்ஸ்டன் நடித்து வருகிறார்.

நடிகர் லிவிங்ஸ்டன் பூந்தோட்ட காவல்காரன் கேப்டன் பிரபாகரன் பாட்டுக்கு நான் அடிமை சிவாஜி விரலுக்கேத்த வீக்கம் அதே மனிதன் வானத்தை போல எங்களுக்கும் காலம் வரும் பிரியமான தோழி பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சுந்தர புருஷன் சொல்லாமலே போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

- Advertisement -

இதில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு தகவல் என்னவென்றால் இயக்குனர் கே பாக்யராஜிடம் நடிகர் லிவிங்ஸ்டன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பல படங்களில் அவர் கே பாக்யராஜின் உதவியாளராக இருந்திருக்கிறார். அதன்பிறகுதான் அவர் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் நடிகராக அறிமுகமாகி உள்ளார். அந்த வாய்ப்பை தந்தது நடிகர் விஜயகாந்த் தான்.

நடிகர் லிவிங்ஸ்டன் ஆரம்பகால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் கூறியதாவது, பாடகர் வாய்ப்பு கேட்டு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளையராஜாவிடம் நான் சென்றேன். அப்போது அங்கு இருந்தவர்கள் வாய்ப்பு இல்லை என்று சொல்லி என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டனர்.

- Advertisement -

இதனால் மனம் நொந்து போய் அங்கு ஓரமாய் நின்று நான் அழுதுகொண்டு இருந்தேன். அப்போது என்னை பார்த்து பரிதாபப்பட்ட இயக்குனர் கே பாக்யராஜ் அவருக்கு உதவியாளராக எனக்கு வாய்ப்பு கொடுத்து மறுநாளே என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார் என்று நடிகர் லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.

நடிகர் லிவிங்ஸ்டனை போல இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனர்களாக பணிசெய்தவர்கள் தான் இயக்குனர்கள் பார்த்திபன் பாண்டியராஜன் வி சேகர் போன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இயக்குனர் வி சேகர் மறைந்த நிலையில் அவரது குருநாதர் இயக்குனர் கே பாக்யராஜூம் நேற்று மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்