எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல் குறும்படங்களை இயக்கிய அனுபவங்களோடு நேரடியாக தமிழ் சினிமா களத்தில் இயக்குனராக குதித்தவர் லோகேஷ் கனகராஜ். அவரது முதல் படம் மாநகரம், அவரது சிறப்பை உழைப்பை திறமையை சொன்னது. தொடர்ந்து அவர் இயக்கிய கைதி படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் மாஸ் ஹிட் படமாக இருந்தது.
கைதி படத்தில் கதாநாயகி கிடையாது; பாடல் காட்சிகள் கிடையாது. ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய இந்த படம் மொத்தம் 57 இரவுகளும் ஒரு அரை நாள் பகலிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாஸ்டர் விக்ரம் லியோ கூலி படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் லியோ கூலி 2 படங்களுமே விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்த படங்களாக உள்ளன.
ஒரு திரைப்படம் என்றால் எப்போதுமே ஹீரோ இமேஜை தூக்கிப் பிடிக்க வேண்டும். ஆனால் லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் மாறுபட்டவராக தான் இருக்கிறார். விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை, டிடெக்டிவ் ஏஜண்ட் ஆக நடித்த பகத் பாசிலை தான் பெரிய அளவில் நடிக்க வைத்திருந்தார். கமல்ஹாசனுக்கு டம்மி நடிப்புதான். கடைசியில் வரும் சூர்யாவுக்கு கிடைத்த வைப் கூட கமலுக்கு கிடைக்கவில்லை.
அதே போல் மாஸ்டர் படத்திலும் விஜயை காட்டிலும் விஜய் சேதுபதியை தான் பெரிய வில்லனாக லோகேஷ் கனகராஜ் படத்தில் கொண்டு வந்திருந்தார். படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் விஜயை காட்டிலும் விஜய் சேதுபதி நடிப்புதான் சூப்பர் என பாராட்டியிருந்தனர். விஜய்க்கு இந்த படத்தில் இடைவேளை வரை மதுபாட்டிலும் கையுமாக இருக்க செய்திருந்தார்.
லியோ படத்திலும் அர்ஜூன் சஞ்சய் தத் சாண்டி மாஸ்டர் மிஷ்கின் போன்றவர்கள் சில காட்சிகளே நடித்திருந்தாலும் அவர்களுக்கான பில்டப் தான் படத்தில் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருந்தது. அதே போல் இப்போது வெளியான கூலி படத்திலும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்தவர்கள் வில்லனாக வரும் சௌபின் சாஹிர், நாகர்ஜூனா மற்றும் ரக்சிதா ராம் போன்றவர்கள்தான்.
குபேரா படத்தில் நடித்த போது, நான்தான் படத்தின் ஹீரோ என்று சொன்ன நாகர்ஜூனா, கூலி படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் நான்தான் ஹீரோவாக இருப்பேன் என்று கூறியிருந்தார். அதே போல் நாகர்ஜூனா இறந்த பிறகு படமே முடிந்துவிட்டது. பிறகு எதற்கு ரஜினி, அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் காட்சிகள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆக மொத்தத்தில் ஹீரோக்களை தனது படங்களில் டம்மியாக்கி வில்லன்களை பில்டப் செய்வதே லோகேஷ் கனகராஜின் ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.





