- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2வில் கமல்ஹாசன் கெட்டப்பை பலரும் கழுவி ஊற்றி வரும் நேரத்தில், சைலண்டாக காரியத்தை செய்து...

இந்தியன் 2வில் கமல்ஹாசன் கெட்டப்பை பலரும் கழுவி ஊற்றி வரும் நேரத்தில், சைலண்டாக காரியத்தை செய்து முடித்து சிலாகித்த லோகேஷ் கனகராஜ்… யாரை கலாய்க்க இப்படி செஞ்சார் என ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைந்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ அண்மையில் வெளியானது. அதில் ரஜினியின் கெட்டப், அனிருத்தின் இசை மற்றும் ரஜினி பேசிய வசனங்கள் இணையத்தில் பேசப்பட்டன.

 

தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் எடுத்த திரைப்படங்கள் போல் இல்லாமல், சோதனை முயற்சியாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு நண்பனாக சத்யராஜ் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.

 

இந்த படத்தின் சூட்டிங், ஜூன் மாத தொடக்கத்திலேயே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஸ்கிரிப்ட்டை முடிக்காத காரணத்தினாலும், ரஜினிக்கு திரைக்கதையில் சில அதிருப்தி இருந்ததாலும் தாமதமாவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

இப்படியான சூழலில் கூலி படத்திற்கான ரஜினிகாந்தின் டெஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் அவரது கெட்டப்பே சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் காலா படத்தில் இருந்தது போன்று, ரஜினியின் கெட்டப் இருப்பதாகவும் இங்கு சிலர் பேசி வருகின்றனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் எதிர்பார்க்காத இன்னொரு விஷயமும் இப்போது பேசப்பட்டு வருகிறது.

 

கமல்ஹாசன் சங்கர் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது சிலருக்கு பிடித்திருந்தாலும் பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. அவரது தோற்றம் சுத்தமாக ஈடுபடவில்லை என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

 

ஷங்கரின் முந்தைய திரைப்படங்களின் சாயல் இந்த ட்ரெய்லரிலே தெரிவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நீண்ட முடியுடன் சேனாபதி இருப்பது, எடுபடவே இல்லை என்ற வாதமும் எழுந்துள்ளது. இப்படியான நேரத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் ஸ்டைலான கெட்டப்பை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து காண்டாகி இருக்கும் கமல் ரசிகர்கள், இவர் வேண்டுமென்று தான் இதை செய்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

சற்று முன்