- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் என்கிட்ட அந்த விஷயத்தை சொன்னார்... அவர்கிட்ட நான் இந்த விஷயத்தை சொன்னேன்... மறுபடியும் சீக்ரெட்டை...

நெல்சன் என்கிட்ட அந்த விஷயத்தை சொன்னார்… அவர்கிட்ட நான் இந்த விஷயத்தை சொன்னேன்… மறுபடியும் சீக்ரெட்டை கசிய விட்ட லோகேஷ் கனகராஜ்… அண்ணா போதும்ணா…

- Advertisement -

கூலி திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அதன் பிரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. அதேசமயம் படக்குழுவினரை விட ஒரு படித் தாண்டி பம்பரமாக சுற்றிக்கொண்டு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்ல படம் குறித்த புதிய தகவல்களை அவர் ஒவ்வொரு பேட்டியிலும் வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படத்தைப் பார்த்து முடித்ததும் ரஜினிகாந்த் என்னிடம் வந்து பாராட்டியதாகவும், தளபதி திரைப்படத்தைப் போன்று இது உள்ளது என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாம் அடுத்ததாக மீண்டும் இணைவோம் என ரஜினிகாந்த் என்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்ல, கூலி திரைப்படத்தின் பணிகளின் போது தனது சூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சுயசரிதையை எழுதியதாகவும், இதை என்னுடன் மட்டுமே அவர் ஷேர் செய்ததாகவும் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். நிச்சயமாக கூலி திரைப்படம் போதை பொருளை மையப்படுத்திய கதை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த திரைப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த காட்சி இடைவேளைதான் என்றும், அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இப்படி லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு பேட்டியிலும், கூலி திரைப்படத்திலிருந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய ரஜினிகாந்த், இந்த திரைப்படத்தின் கதையை என்னிடம் வந்து கூறும் போது லோகேஷ் கனகராஜ் தான் ஒரு கமல் ரசிகன் என்று தெரிவித்தார். லோகேஷ் நான் உங்களிடம் இதை கேட்டேனா என்று மேடையை நோக்கி அவரிடம் கிண்டலாக பேசினார் ரஜினிகாந்த். அது மட்டுமல்ல, லோகேஷ் கனகராஜின் பேட்டி ஒன்றை தான் பார்த்தேன் என்றும், தூங்கி எழுந்த பிறகும் அந்த வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் நகைச்சுவையாக பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

இப்படியான சூழலில், நெல்சன் உடனான உறவு குறித்து லோகேஷ் கனகராஜ் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார். அதில், படப்பிடிப்புக்கு முன்னதாகவே நான் கூலி திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை நெல்சனிடம் கூறினேன். அதேபோல் நெல்சன் என்னிடம் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிப்ட்டை தெரிவித்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் பணிபுரிந்து வருகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சற்று முன்