- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்... கார்த்தி ரசிகர்களையும் குஷி படுத்திய...

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்… கார்த்தி ரசிகர்களையும் குஷி படுத்திய அறிவிப்பு…

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

தனது எல் சி யு கான்செப்ட் மூலம் இந்திய சினிமாவில் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகம், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளார். ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமாக இது உருவாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர்கள் சண்டை பயிற்சியாளர்களாக பணிப்புரியே இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கும் லோகேஷ் கனகராஜ், இது எல்சி யூ வில் வராது என்றும், தனது முந்தைய திரைப்படங்களைப் போல போதைப் பொருட்களின் காட்சியின் இருக்காது என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சோதனை முயற்சியாக இந்த திரைப்படத்தை தான் இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு, லோகேஷ் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நடுவே இனிமேல் என்னும் ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் வரிகளில், சுருதிஹாசனின் இசையமைப்பில் இந்த ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதனை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை சுருதிஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், நான்கு ஐந்து மாதங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும். ஒன்றை ஆண்டுகள் இதற்கான பணிகளில் நான் செலவு செய்துள்ளேன். ரஜினி படத்தை முடித்த பிறகு ஒரு மாத இடைவெளியில் கைதி படத்தையும் நான் தொடங்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்