- Advertisement -
Homeபொழுதுபோக்குவழக்கம் போலவே "கூலி" படமும் LCU-வில் வருகிறதா? ரசிகர்களின் கேள்விக்கு - லோகேஷ் கனகராஜ் பதில்

வழக்கம் போலவே “கூலி” படமும் LCU-வில் வருகிறதா? ரசிகர்களின் கேள்விக்கு – லோகேஷ் கனகராஜ் பதில்

- Advertisement -

கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் ஹிட் அடிக்கின்றன. இதன் காரணமாக ஒரு சில படங்களிலேயே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்து நிற்கிறார்.

மாநகரத்தில் ஆரம்பித்த இவரது பயணம் கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை பெற்று ஏறுமுகத்தை மட்டுமே கண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு சத்யராஜ் நடிக்கிறார். அதுமட்டும் இன்றி ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் இருக்கும் என்பதும் உறுதி.

எப்பொழுதுமே லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் ஏதாவது ஒரு இணைப்பை ஏற்படுத்தி அதனை தனது யுனிவர்சுக்குள் கொண்டு வந்து விடுவார். அந்த வகையில் ரஜினிகாந்தின் கூலி படமும் LCU-வில் வருகிறதா? என்பதே ரசிகர்கள் பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டி ஒன்றில் கூறியதாவது : “ரஜினி சாரின் படத்திற்கு நிகரான மாஸ் எலமென்ட்களுடன் கூடிய பக்கா கமர்சியல் படமாக “கூலி” இருக்கும்”. இது கண்டிப்பாக LCU-வில் வராது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முழுக்க முழுக்க ரஜினியை வைத்து அவருக்கான ஸ்டைலிலேயே “கூலி” திரைப்படம் படுமாஸாக வர இருக்கும் என்று தெரிகிறது. கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” மெஹா ஹிட்டடித்த வேளையில் தற்போது இந்த “கூலி” திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்