- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக நடிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது ரஜினியின் மருமகள்தான் -...

ஹீரோவாக நடிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது ரஜினியின் மருமகள்தான் – லேட்டஸ்ட் அப்டேட் தெறிக்க விடுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக மாறும் இயக்குனர்களின் வரிசையில் இப்போது லோகேஷ் கனகராஜூம் இணைந்து விட்டார். நிறைய இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் நடிகர்களாக மாறியிருக்கின்றனர். ஒரு சிலர் ஹீரோக்களாகவும் மாறியிருக்கின்றனர். அந்த வரிசையில் சுந்தர் சி சேரன் பார்த்திபன் கே பாக்யராஜ் பாரதிராஜா மனோபாலா மணிவண்ணன் என பலரை சொல்லலாம்.

இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கூட முதல் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு 2வது படத்தை இயக்க திட்டமிடாமல் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். அதே வரிசையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ மற்றும் கூலி என 6 படங்களை மட்டுமே இயக்கிய நிலையில் ஹீரோவாக வந்து விட்டார்.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளராகவும் சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கிய லோகேஷ் கனகராஜ் இப்போது ஹீரோவாக விரைவில் களத்தில் இறங்குகிறார். சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் அவரது படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறது.

வழக்கமாகவே ரத்தம் தெறிக்கும் வன்முறை கதைகளை படமாக்குவதில் லோகேஷ் கனகராஜ் அதிக விருப்பம் கொண்டவர். அதே போல் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கும் திரை முழுக்க வன்முறை காட்சிகளும் ரத்தம் சொட்டும் காட்சிகளும் இருந்தால்தான் படமே திருப்தியளிக்கும். இப்படி வன்முறையை மட்டுமே விரும்பும் ஒரு இயக்குனர், ஒரு ஹீரோ இணையும் அந்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேச துவங்கிவிட்டனர்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சில படங்களை இயக்க கமிட் ஆகியிருக்கிறார். இதில் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ரூ. 190 கோடிக்கு மேல் படத்தின் பட்ஜெட் இருப்பதால் நடிகர் கார்த்தியை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எடுக்க முடியாது என தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தையே டிராப் செய்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக மலையாள நடிகை மிர்ணா மேனன் நடிக்க உள்ளதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக, வசந்த் ரவியின் மனைவியாக நடித்தவர்தான் மிர்ணா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்