- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா வரலாற்றில் மிக நீளமான பெயர் கொண்ட படம் எது தெரியுமா? அதுவும் நம்ம...

தமிழ் சினிமா வரலாற்றில் மிக நீளமான பெயர் கொண்ட படம் எது தெரியுமா? அதுவும் நம்ம தலைவர் மன்சூர் அலிகான் நடித்த படம்தான், அட ஒளிப்பதிவாளர் இவரா? – ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான கலைஞர்கள் இருக்கின்றனர். நடிகராக இருந்தாலும் அவர்களது தனித்துவத்தை இழக்காமல் தங்களது இயல்பு எப்படியோ அப்படியே பொதுவெளிகளிலும் ரசிகர்கள் மத்தியிலும் கலந்துக் கொள்வார்கள். மேக்கப் போட்ட முகங்களுடன் கேமரா முன் நடிப்பார்களே தவிர, நிஜத்தில் அவர்கள் நடிப்பது கிடையாது.

அப்படி இயல்பான சுபாவத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் துணை நடிகர்களில் ஒருவராக இருந்த அவரை, வில்லனாக அறிமுகப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.

- Advertisement -

விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்தில் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கேரக்டரை தழுவிய வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகானை பிரதான வில்லனாக விஜயகாந்த் நடிக்க வைத்தார். தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் மன்சூர் அலிகான்.

அதன்பிறகு பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் காமெடி கேரக்டர்களிலும் மன்சூர் அலிகான் நடித்தார். ஒரு சில படங்களில் அவரே நாயகனாகவும் நடித்து, அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்ற அவரது கட்சி சார்பில், சுயேச்சையாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சரக்கு என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து, நடித்திருந்தார். இந்த படத்தின் இசை விழாவில் கூல் சுரேஷ், பெண் தொகுப்பாளருக்கு கழுத்தில் மாலையிட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் மிக நீளமான டைட்டில் கொண்ட படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். பாலு ஆனந்த் படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தின் பெயர் ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்பதாகும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், இசையமைப்பாளரும் மன்சூர் அலிகான்தான். மொத்தம் 52 எழுத்துகளை கொண்ட இந்த படத்தில் நாயகியாக நந்தினி மற்றும் விவேக், நெப்போலியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 1993ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி உள்ளது. அப்போது படத்தின் பெயரை பார்த்தே ரசிகர்கள் மலைத்து போய்விட்டார்களாம்.

- Advertisement -

சற்று முன்