- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்துக்கு சம்பளத்தை கட் செய்த லைகா?.. அய்யய்ய இப்போதைக்கு விடாமுயற்சி பஞ்சாயத்து முடியாது போலயே..

அஜித்துக்கு சம்பளத்தை கட் செய்த லைகா?.. அய்யய்ய இப்போதைக்கு விடாமுயற்சி பஞ்சாயத்து முடியாது போலயே..

- Advertisement -

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் கடைசியாக நடித்த படம் துணிவு. இரண்டு பேரும் அதற்கு முன்னதாக சேர்ந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதன் காரணமாக துணிவு மூலம் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் வினோத். அவர் எதிர்பார்த்தபடியே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கமர்ஷியலாக இருந்தாலும் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள் இருந்தன.

இதற்கிடையே துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தாந்து 62ஆவது படத்தில் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கமிட்டானார். ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு அஜித் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியானது.

பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் அமலாக்கத்துறையினரும் லைகா நிறுவனத்தில் சோதனை நடத்தியதாலும், மகிழ் திருமேனி திரைக்கதையை இறுதி செய்யாததாலும் ஷூட்டிங் தொடங்கவில்லை என கூறப்பட்டது. எனவே இந்த கேப்பை பயன்படுத்திக்கொண்ட அஜித் தனது பைக்கை எடுத்துக்கு உலக டூருக்கு சென்றார்.

பல மாதங்கள் ஆகியும் எந்த அப்டேட்டும் வராமல் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்கள் என்றும் இந்த மாதத்துக்கு அபுதாபியில் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. அஜித்தும் இப்போது வளைகுடா நாடுகளில்தான் பைக் ட்ராவலில் இருக்கிறார். இதையெல்லாம் கனெக்ட் செய்து பார்த்து ஷூட்டிங் தொடங்குவது உறுதி என கணக்கு போட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்துக்காக அஜித்துக்கு 105 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு 25 கோடி ரூபாய் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டதாம். மீதி பணத்தில் மாதா மாதம் 5 கோடி ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பதுதான் அக்ரீமெண்ட்டாம். ஆனால் ஷூட்டிங்கே இன்னும் தொடங்காததால் கடைசி மூன்று மாதங்களாக அஜித்துக்கு பணம் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒருவேளை இந்த சம்பள பிரச்னையால் மேற்கொண்டு படப்பிடிப்பு தாமதமாகிவிடுமோ என அச்சப்பட்டு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

சற்று முன்