- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்சியு-வான பென்ஸ் படத்தில் லியோ தாஸின் தங்கச்சி வருகிறாரா... அப்படினா தளபதி ரெபரன்ஸ் இருக்க போகுது......

எல்சியு-வான பென்ஸ் படத்தில் லியோ தாஸின் தங்கச்சி வருகிறாரா… அப்படினா தளபதி ரெபரன்ஸ் இருக்க போகுது… தலை, கால் புரியாமல் குதிக்கும் தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது அதில் தனது முந்தைய திரைப்படமான கைதியின் கதாபாத்திரங்களை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதாவது எல் சி யு என பெயர் வைத்து ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் சூர்யா வந்ததும், கைதியின் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக ரிவில் செய்ததும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இதிலும் தனது எல்சியூ கான்செப்ட்டை அவர் வைத்திருந்தார். கைதி திரைப்படத்தின் நெப்போலியன் ரோலில் வந்திருந்த காவலர் கதாபாத்திரம், லியோவிலும் வந்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல், கிளைமாக்ஸ் காட்சியில் விஜயிடம் விக்ரம் கதாபாத்திரமான கமல்ஹாசன் தொலைபேசியில் உரையாடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் லியோ திரைப்படத்திற்கு இந்த எல்சியு தேவையில்லை என்றே பலரும் கூறினர். தாங்கள் வேறு லெவலில் எல்சியுவை எதிர்பார்த்ததாகவும் ஆனால் அது படத்தில் சரியாக இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.

இப்படியான சூழலில் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் திரைப்படம் உருவாகிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் பாக்யராஜ் கண்ணன். லோகேஷ் கனகராஜ் கதையைத்தான் அவர் இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முழுக்க முழுக்க தங்கம் அணிந்து கொண்டு அவர் கதாபாத்திரமே மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. வால்டர் என்னும் கதாபாத்திரத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். இது மட்டுமல்ல ஹரிஷ் கல்யாணும் படத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில் மடோனா செபஸ்டின் படத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் ஏற்கனவே லியோ திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். அதில் அவர் உயிரிழப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் பென்ஸ் திரைப்படம் எல்சிவுக்குள் வருவதால், மடோனா செபஸ்டின் நடித்திருந்த எலிசா கதாபாத்திரம் தற்போது தமிழ் சினிமாவில் டாப் கன்டென்ட் ஆக மாறி இருக்கிறது. அது மட்டுமல்ல ஒருவேளை லியோ கதாபாத்திரமும் இதில் வருமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்