- Advertisement -
Homeபொழுதுபோக்கு13 ஆண்டுகளுக்கு பின்… அப்படி ஒரு வெற்றி மீண்டும் கிடைக்குமா? மதராஸி படம் நாளை ரிலீஸ்...

13 ஆண்டுகளுக்கு பின்… அப்படி ஒரு வெற்றி மீண்டும் கிடைக்குமா? மதராஸி படம் நாளை ரிலீஸ் – ஆவலாக காத்திருக்கும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அஜீத்குமார் நடித்த தீனா என்ற படம் மூலம் ஏஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அஜீத்குமாருடன் லைலா சுரேஷ்கூபி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து கஜினி ரமணா கத்தி தர்பார் சர்கார் துப்பாக்கி ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களை ஏஆர் முருகதாஸ் இயக்கி இருக்கிறார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆகிறது இந்த படத்தின் வெற்றியை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நம்பிக்கையாக காத்திருக்கிறார் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.

- Advertisement -

கடைசியாக இந்தியில் சன்மான்கானை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய படம் சிக்கந்தர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பு இந்தியில் அவர் இயக்கிய அஹிரா, ஹாலிடே ஆகிய படங்களும் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை. இந்தியில் தொடர்ந்து 3 தோல்வி படங்களை அவர் கொடுத்துவிட்டார்.

அதே போல் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படமும் விஜய் நடித்த கத்தி படமும் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படமும் பெரிய வெற்றியை ஏ ஆர் முருகதாஸூக்கு கொடுக்கவில்லை. 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான துப்பாக்கி படம்தான் ஏஆர் முருகதாஸூக்கு ஒரு மாஸ் சூப்பர் ஹிட் படமாக இருந்தது. அதுபோன்ற ஒரு மாஸ் சூப்பர் ஹிட் படத்துக்காக 13 ஆண்டுகளாக அவர் காத்திருக்கிறார்.

- Advertisement -

இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படம் கொடுக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் ஏஆர் முருகதாஸ், 13 ஆண்டுகளுக்குப் பின் நாளை வெளியாகும் மதராஸி படத்தை மலை போன்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நிலையில் அவரை வைத்து மான் கராத்தே என்ற வெற்றிப் படத்தை தயாரித்தவர் ஏஆர் முருகதாஸ். அந்த நட்புக்காக தான் ஏஆர் முருகதாஸூக்கு,, சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு கால்ஷீட் தந்தார்.

சினிமாவில் இயக்குனராகி 25வது ஆண்டை விரைவில் தொடப் போகும் ஏஆர் முருகதாஸ், இதுவரை இயக்கிய 15 படங்களில் தீனா ரமணா கஜினி துப்பாக்கி ஆகிய 4 படங்களும் மட்டும்தான் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மதராஸி படம் அந்த படங்களை போல, குறிப்பாக துப்பாக்கி போல ஒரு மாஸ் சூப்பர் ஹிட் படமாக அமைந்தால் அது அவருக்கு சூப்பர் கம்பேக் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்