- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று திறக்கப்பட்ட இட்லி கடையில் முதல் நாள் வியாபாரம் எப்படி? சிவகார்த்திகேயனை வசூலில் முந்தினாரா இயக்குனர்...

நேற்று திறக்கப்பட்ட இட்லி கடையில் முதல் நாள் வியாபாரம் எப்படி? சிவகார்த்திகேயனை வசூலில் முந்தினாரா இயக்குனர் தனுஷ்? – என்னப்பு இப்படி பண்ணீட்டிக…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த இட்லி கடை. நேற்று இந்த படம் வெளியானது. இட்லி கடை படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. எமோஷனல் சென்டிமென்ட் ஓவராக இருப்பதாக ஒரு சிலர் கூறினாலும் ஒரு தரப்பினர் குடும்பக் கதை ஃபேமிலியாக சென்று பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இட்லிக்கடை படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் நித்யாமேனன் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். அருண் விஜய் ஷாலினி பாண்டே சத்யராஜ் பார்த்திபன் சமுத்திரக்கனி ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். கடந்தாண்டில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

ராயன் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. ஆனால் நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குபேரா படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படம் தமிழ்நாட்டில் 4.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கில் குபேரா படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. காரணம், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா அதில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் இட்லி கடை முதல் நாளில் 10. 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 9.75 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தெலுங்கு வெர்சனில் வெளியான இட்லி கடை மொத்தம் 65 லட்சம் ரூபாய் வசூலை கடந்துள்ளது. இதற்கிடையே மதராஸி படத்தை விட இட்லி கடை படம் முதல் நாள் வசூலில் தோற்றுவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டுமே மதராஸி படம் 12.8 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷ் நடித்த இட்லி கடை முதல் நாள் வசூலில் மதராஸி படத்தை முந்தவில்லை. ரூ. 10.40 கோடி மட்டுமே வசூலித்து பின்தங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் இன்று கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது. அதனால் இட்லி கடை படத்தின் திரைகளை குறைத்துவிட்டு காந்தாரா சாப்டர் 1 படம் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இட்லி கடை வியாபாரம் இன்னும் மந்தமாக அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்