- Advertisement -
Homeபொழுதுபோக்குடாக்டர் அமரன் படங்களுக்கு பிறகு அந்த லிஸ்ட்டில் மதராஸி படமும் இணையுமா? லேட்டஸ்ட் நிலவரம் என்ன?...

டாக்டர் அமரன் படங்களுக்கு பிறகு அந்த லிஸ்ட்டில் மதராஸி படமும் இணையுமா? லேட்டஸ்ட் நிலவரம் என்ன? வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

ஒரு திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தால் அது உலகளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த 2007ம் ஆண்டில் வெளியான சிவாஜி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தசாவதாரம் துப்பாக்கி ஆரம்பம் ஐ தனி ஒருவன் கைதி என பல படங்கள் ரூ. 100 கோடி வசூல் என்ற சாதனையை படைத்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்தன. இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 2021ம் ஆண்டு வெளியாகி ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தது.

அந்த வரிசையில் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், மகாராஜா ராயன் அரண்மனை 4 இந்தியன் 2 கங்குவா ரெட்ரோ என பல படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கின்றன. நடப்பாண்டில் வெளியான தலைவன் தலைவி கூலி குட் பேட் அக்லி குபேரா படங்களும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளன.

டாக்டர் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் அமரன் ஆகிய இரண்டு படங்களும் ரூ. 100 கோடி வசூலை கடந்தன. இந்நிலையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.

ரூ. 125 கோடி பட்ஜெட்டில் உருவான மதராஸி படத்தின் சேட்டிலைட் டிஜிட்டல் உரிமம் ரூ. 80 கோடி ரூபாய்க்கும் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடிக்கும் ஏற்கனவே விற்பனையானதாக கூறப்படுகிறது. மதராஸி படம் வெளியாகும் முன்பே ரூ. 90 கோடி வசூலித்த நிலையில் இப்போது படம் ரிலீஸாகி 6 நாட்களில் மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் தியேட்டர்களில் மதராஸி படம் வசூலித்திருப்பதாக தெரிய வருகிறது.

நாளை 12ம் தேதி புதிதாக 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்போது மதராஸி திரையிடப்பட்ட தியேட்டர்களில் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. எனினும் வெள்ளி சனி ஞாயிறு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் மதராஸி படமும் இணையுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சற்று முன்