- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்ததா? விஜய் வாழ்த்து தெரிவிச்சாரா? - குடிக்கிற...

என்னது, மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்ததா? விஜய் வாழ்த்து தெரிவிச்சாரா? – குடிக்கிற தண்ணீரை தீர்த்தம்ன்னு தெளிச்சீங்களே அதுவா? மதுரை மக்கள் ஆவேசம்!

- Advertisement -

தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த பழமையான ஆன்மீக தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற அன்னை மீனாட்சியின் அருள் வேண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

கடந்த வாரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. ஆனால் இந்த கோவிலுக்குள் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே இரும்பு தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.

- Advertisement -

கோவில் குடமுழுக்கு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் டோக்கன் அச்சடிக்கப்பட்டு ஒரு டோக்கன் விலை ரூ. 3 ஆயிரம் ரூ. 4 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனால் வசதியான பக்தர்கள் மட்டுமே டோக்கன் வாங்கிய நிலையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குடமுழுக்கு நடந்த நாளிலேயே மதுரையில் வெடித்தது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கை காண வந்த ஏராளமான மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கிருந்த போலீஸார், கோவில் நிர்வாக அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பது போல கோவில் விழாவுக்கு டோக்கன் அடித்து விற்றதாக தவெகவினர் மீது மதுரை மக்கள் புகார் எழுப்பிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

அதே நேரத்தில் கோவில் குடமுழுக்கு நடந்த போது தங்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கப்படவில்லை என்று காத்திருந்த பக்தர்கள் கூட்டம் புகார் எழுப்பிய நிலையில், அங்கு இருந்த போலீசார் சிலர் அங்கு குடிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை எடுத்து பொதுமக்கள் மீது வீசி தெளித்து விட்டு இதுதான் தீர்த்தம் என்று சொல்லி சமாளித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முதல்வர் விஜயிடம் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் வழங்கியதாகவும், அப்போது குடமுழுக்கு சிறப்பாக நடந்ததற்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாகவும் ஒரு பதிவை செய்திருக்கிறார். பிளாக்கில் டோக்கன் விற்று, பக்தர்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி, குடிதண்ணீரை தீர்த்தம் என்று தெளித்ததுதான் சிறப்பான குடமுழுக்கா? என்று மதுரை மக்கள் ஆவேசமாக பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்