துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் குமாருக்கு திரைப்படம் வெளியாகி உள்ளது. பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. வெளிநாட்டில், மிகவும் நேர்த்தியாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளதாக பலரும் பாராட்டுகிறார்கள்.
அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்திருக்கிறார். அவருக்கு மனைவியாக கயல் என்னும் ரோலில் வருகிறார் திரிஷா. தனது கணவர் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, விவாகரத்து முடிவெடுக்கிறார் திரிஷா. இருவரும் இறுதியாக நெடுந்தூரம் சாலையில் பயணம் மேற்கொள்ளும் போது, திரிஷா காணாமல் போகிறார்.
இதன் பிறகு என்ன ஆகிறது என்பது தான் விடா முயற்சி திரைப்படத்தின் கதை. படத்தை பார்த்து விட்ட அஜித் ரசிகர்கள் பலரும் இது நன்றாக இருப்பதாக கூறுகின்றனர். அதே சமயம் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் கடைசி அரை மணி நேரம் காட்சிகள் அந்த அளவுக்கு எடுபடவில்லை என்றும் பலர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இந்த விமர்சனங்கள் விடா முயற்சி திரைப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வரை 150 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் ஈட்டி இருப்பதாக கூறுகிறார்கள். இருப்பினும், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. படத்தில் திரிஷாவிற்கு ஒரு ஆண் நண்பர் இருப்பது போன்று காட்சிகள் இருக்கும்.
ஆனால் அது பற்றி பெரியதாக எதுவும் கூறி இருக்க மாட்டார்கள். அந்த கேரக்டரை, திரையரங்குகளில் அறிமுகம் செய்திருக்க மாட்டார்கள். இதுகுறித்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி பதிலளித்திருக்கிறார். அதில், நாங்கள் அதை ஓபன் என்ட் ஆக விட்டு விட்டோம். இதனை நீங்கள் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம்.
உண்மையிலேயே அந்த கேரக்டர் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது விவாகரத்து பெறுவதற்காக த்ரிஷா கூறிய பொய் என்றும் நீங்கள் கருதலாம். திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அஜித்குமார் சார், தயாரிப்பு நிறுவனம், நான் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உண்மையான ரசிகர்களுக்கும் நடுநிலை ரசிகர்களுக்கும் இந்தத் திரைப்படம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.





