- Advertisement -
Homeபொழுதுபோக்குமகுடம் திரைப்படத்தை விஷால்தான் இயக்குகிறாரா... வெளிவந்த வீடியோ... மறுக்கும் இயக்குனர்...

மகுடம் திரைப்படத்தை விஷால்தான் இயக்குகிறாரா… வெளிவந்த வீடியோ… மறுக்கும் இயக்குனர்…

- Advertisement -

நடிகர் விஷாலுக்கு கடந்த பொங்கல் அன்று மதகஜராஜா திரைப்படம் வெளியானது. 13 ஆண்டுகளுக்கு முன்பே சுந்தர் சி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக முடங்கி கிடந்த சூழலில் அது ஒரு வழியாக தீர்க்கப்பட்டு திரையரங்குகளுக்கு வந்தது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அந்தப் படம் வெற்றி பெற்றதுதான்.

முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக எடுக்கப்பட்ட அதற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக ஹீரோவாக மாறி போயிருக்கும் சந்தானத்தை அதில் காமெடி ரோலில் பார்த்ததால், விண்டேஜ் சந்தானத்தை பார்த்த எஃபெக்ட் இருந்ததாக கூறி பலரும் படையெடுத்தனர். இதன் காரணமாக பொங்கலுக்கு மதகஜராஜா திரைப்படம் சக்கை போடு போட்டது.

- Advertisement -

50 கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூல் ஈட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த நடுவே உடல் நலக்குறைவால் விஷால் பாதிக்கப்பட்டிருந்தார். மதகஜராஜாவின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கை நடுங்கியபடி பேசினார். காய்ச்சல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெளிவு படுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

நடுவே செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை சாய் தன்சியாவை தான் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். தற்போது மகுடம் என்னும் திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த திரைப்படத்தில் விஷாலுக்கு மூன்று கெட்டப்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனை ரவி அரசு இயக்கி வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே இவர் அதர்வாவை வைத்து ஈட்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அது மட்டுமல்ல அதர்வாவுக்கும் இந்த திரைப்படம் வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷை வைத்து ஐயங்கரன் என்னும் திரைப்படத்தை இயக்கினார் ரவி அரசு.

இந்த நிலையில்தான் தனது மூன்றாவது திரைப்படத்திற்காக விஷாலுடன் கைகோர்த்து இருக்கிறார் ரவி அரசு. இதில் ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதுபோக ரவி அரசு படத்தில் இருந்து விலகியதாகவும் விஷாலே படத்தை இயக்குவதாகவும் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விஷால் படத்தை இயக்குவது தொடர்பான வீடியோ வெளியானது. ஆனால் அதனை ரவி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளார். படத்தை நான் மட்டுமே இயக்குவதாகவும், தீபாவளிக்கு பிறகு அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்