அஜித் குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் விடா முயற்சி. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் முதலில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகினார்.
இப்படியாகத்தான் விடாமுயற்சி திரைப்படத்திற்குள் வந்தார் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்கள் கழித்தே படக்குழுவினர் சூட்டிங் சென்றனர். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அஜர்பைஜான் நாட்டில் இதற்கான சூட்டிங் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட அங்கேயே 90 சதவீத படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த ஆரவ்விற்கும் வில்லன் கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இதற்கு அனிருத் இசை அமைத்திருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தில் இருந்து டீசர் வெளியானது.
உலக சினிமா தரத்தில் அதன் காட்சிகள் இருப்பது படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிந்தது. இதனால் அப்போதே பலரும் விடாமுயற்சி திரைப்படத்தை பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் லைக்கா நிறுவனம் சொன்னதை செய்யவில்லை.
சரியாக புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் படம் வெளியாகாது என்று கூறியதால், அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இப்படியான சூழலில் இந்த மாதிரி இறுதிக்குள் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இப்போது வரை தென்படவில்லை.
இப்படியான சூழலில் விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது அஜித் குமார் இந்த திரைப்படத்தில் மூன்று காலகட்டத்தில் தோன்றுவாராம். கதை நடக்கும் காலகட்டத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதாம். இதற்காகவே அவர் அதிகமாக உடல் எடையை குறைத்து இருக்கிறார். காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





