தமிழ் சினிமாவில் எப்போதேனும் அத்தி பூத்தது போல் மிகச் சிறந்த படங்கள் வெளியாகின்றன. அதுவும் படத்தின் திரைக்கதை ரசிகர்களால் யூகிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த திருப்புமுனைகளை கொண்டதாக மிகவும் வித்யாசமான கதையம்சமாக இருக்கும் பட்சத்தில், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெறுகிறது.
யதார்த்தமான படங்களாக இருந்தாலும், அந்த யதார்த்த படங்களிலும் ஆக்சன், க்ரைம் கலந்த படமாக அதை தருவது என்பது எல்லா இயக்குனர்களுக்கும் சாத்தியமில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் மகாராஜா படம், ஆக்ஷன் அதிரடி சஸ்பென்ஸ் கலந்த படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படம் இது என்பது கவனிக்கத்தக்கது. இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை டைரக்ட் செய்த மித்திலன் சுவாமிநாதன் மகாராஜா படத்தை டைரக்ட் செய்திருந்தார், இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி என்கிற நடராஜ், அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் படமாக இருந்தது. குப்பை தொட்டியை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரும் விஜய் சேதுபதி, அதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவழிக்கிறேன் என்று முன் வரும்போது போலீசார் ஒரு கட்டத்தில் ஆச்சரியப்படுகின்றனர். முன்னுக்கு பின் முரணாக பேசும் விஜய் சேதுபதியிடம் உண்மையை கண்டுபிடிக்க அவர்கள் முயற்சித்தும் அவர் உண்மையை சொல்வதே இல்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் தனது மகளை கொடூரமாக தாக்கி கற்பழித்த நபர்களைத்தான் அவர் தேடி கண்டுபிடித்து அவர்களை கொல்ல நினைக்கிறார் என்பது பிறகுதான் ரசிகர்களுக்கே தெரிய வருகிறது. படத்தின் இறுதியில் விஜய் சேதுபதியின் மகளை கற்பழிக்க செய்வது வில்லன்தான் என்பதும், அந்த பெண் வில்லனின் மகள்தான் என்பதும் படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இறுதியில் இருக்கிறது.
தியேட்டர்களில் வெளியான மகாராஜா படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் மகாராஜா படத்தை ரூ. 17 கோடிக்கு வாங்கிய நிலையில், இதுவரை 2 கோடி பேர் வரை படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்துள்ளனர். அதன்மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையான தகவலா என்பது இன்னும் உறுதியாகவில்லை.





