- Advertisement -
Homeபொழுதுபோக்குகிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விளம்பர படங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?...

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விளம்பர படங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா? தலை சுத்திப் போன கிரிக்கெட் ரசிகர்கள் – இது வேற லெவல் தல!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1980களில் கொண்டாடப்பட்டவர் கபில்தேவ். அதன்பிறகு 1990களில் சச்சின் டெண்டுல்கர் அதைவிட மிக அதிகளவில் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.அவரை கிரிக்கெட் கடவுள் என்று இன்றும் ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.

அவரைத் தொடர்ந்து இப்போது இந்திய கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படுபவர் மகேந்திர சிங் தோனி. எம் எஸ் தோனி என சுருக்கமாக தோனி அழைக்கப்படுகிறார். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தல என்ற பெயரும் தோனிக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் தல அஜீத்குமார் என்றால் கிரிக்கெட் உலகில் தல என்றால் அது மகேந்திர சிங் தோனியாக இருக்கிறார்.

- Advertisement -

தன்னுடைய உழைப்பாலும், கிரிக்கெட்டில் செய்த சாதனைகளாலும் மக்களால் கொண்டாடப்படும் ஒருவராக இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணி போட்டியில் எம் எஸ் தோனி. இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், வருகிற 2025ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் எம் எஸ் தோனி கலந்து கொண்டு விளையாடுவாரா மாட்டாரா என்பதுதான்.

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக இருந்து வெற்றி கோப்பைகளை கைப்பற்றியவர். தோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் இணைந்து சொந்தமாக தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் துவக்கினர். அதில் முதல் படமாக ஹரீஷ் கல்யாண், இவானா நடித்த எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்தனர். அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இந்த படத்தில் யோகிபாபு, நதியா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியில் மட்டுமே ஆடி வருகிறார். மேலும் அவரது நடிக்கும் விளம்பர படங்கள் நிறைய வருகின்றன. அவரது விளம்பர படங்கள் வர்த்தக ரீதியாக பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகின்றன. சில நேரங்களில் அந்த விளம்பர படங்களில் அவரது மனைவி சாக்‌ஷியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமர்ஷியல் விளம்பரங்களில் அதிகளவில் நடித்து அதன் மூலம் பலத்த வருவாய் பெற்று வருகிறார் எம் எஸ் தோனி. ஒரு விளம்பரத்தில் ஒரு நாளில் 8 மணி நேரம் சூட்டிங்கில் கலந்து கொள்ள தோனி 25 கோடி சம்பளம் பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது. மற்ற விளம்பரங்களுக்கு சில தினங்கள் தொடர்ந்து நடிக்க 30 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், வாய்பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்