- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த மாஸ்டர் படம் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்குமார்; நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த...

விஜய் நடித்த மாஸ்டர் படம் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்குமார்; நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த ஆச்சரிய தகவல்

- Advertisement -

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித் குமார், தொடர்ந்து காதல் கோட்டை, ஆசை, அமர்க்களம், சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக அஜித்குமார் முன்னேறினார்.

இதற்கிடையே அமர்க்களம் படத்தில் நடித்த போது, அந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சமீபத்தில் மே 1 அன்று பிறந்த நாள் கொண்டாடிய அஜீத்குமாருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பைக் வாங்கி பரிசளித்தார்.

- Advertisement -

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் அஜித்குமார், இப்போது தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித்குமார் என்று சொல்லும் அளவுக்கு நான்கு பேரில் ஒருவராக உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

விஜய் அஜித் இருவருமே ஒரே காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் அறிமுகமானதால் இருவருக்கும் ரசிகர்களாகவே போட்டியை ஆரம்பித்து விட்டனர். விஜய் படம், அஜித் படம் என இருவருக்கும் இடையே ஒரு போட்டியை உருவாக்கி விட்டனர். ரஜினிகாந்த் போல, எம்ஜிஆர் சிவாஜியை போல, அவர்கள் படங்களுக்கும் ரசிகர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித்குமார் பாராட்டிய தகவல் இப்போது வெளிவந்துள்ளது. நடிகர் அஜித்குமார் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படத்தில் ஹீரோவாக விஜய் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகர் அர்ஜூன்தாஸ் நடித்திருந்தார். அர்ஜூன்தாஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மாஸ்டர் திரைப்படம் பார்த்துவிட்டு, அஜித் சார் எனக்கு போன் செய்தார். நல்லா பண்ணி இருக்கீங்க என்று பாராட்டினார் என்று அர்ஜுன் தாஸ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித்குமார் பற்றி அர்ஜூன்தாஸ் சொன்ன இந்த விஷயம், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்