நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி தங்களது மன வேறுபாடுகளை மறந்து மீண்டும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது அவர்களது விவாகரத்து குறித்த மனுதாக்கல். அதிலும் 2004ம் ஆண்டில் நடந்த தங்களது திருமணத்தையே ரத்து செய்து, செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
நீரு பூத்த நெருப்பு போல மிக நீண்ட நாட்களாகவே தனுஷ் – ஐஸ்வர்யா தாம்பத்ய உறவில் பிரச்னைகள் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் அதிக இணக்கம் காட்டுபவர் நடிகர் தனுஷ். அதுவும் வேலையில்லாத பட்டதாரி பாகம் 1 மற்றும் 2 படங்களில் நடித்த போது, ஜோடியாக நடித்த அமலா பால், தனுஷ் அதிக நெருக்கம் காட்டியுள்ளனர்.
இதை பலமுறை ஐஸ்வர்யா கண்டித்தும், தனுஷ் கண்டுகொள்ளவில்லை. அதே போல், தனுஷ் உடன் அதிக நெருக்கம் காட்டிய காரணத்தால்தான், அமலாபாலை காதலித்து திருமணம் செய்த டைரக்டர் ஏஎல் விஜய், அவரை பிரியக் காரணம் என்றும் ஒரு தகவல் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் யாத்ரா, லிங்கா என 2 வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில் ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதாமல் இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம், குடும்பத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள்தான் என்றும் கூறப்படுகிறது.
அதாவது ரஜினி குடும்பத்தை பொருத்தவரை, தனுஷ் மற்றும் தனுஷ் குடும்பத்தாருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம், மரியாதை தருவதில்லை. அதுவே இளைய மகள் சௌந்தர்யா குடும்பத்தினர் என்றால் மரியாதையே வேற லெவலில் இருந்திருக்கிறது. ஒருமுறை கஸ்தூரி ராஜாவை, லதா ரஜினிகாந்த் வெளியே போ என்று ஒருமுறையில் கூறியதை பார்த்து, ரஜினிகாந்த் தலையை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்.
இப்படி பலமுறை தனுஷ் குடும்பத்தை, ரஜினி வீட்டில் அவமதிப்பு செய்திருக்கின்றனர். இந்த கோபத்தில்தான் நடிகர் தனுஷ் 200 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டி தன் பெற்றோரை அங்கு இருக்கச் செய்து அழகு பார்த்துள்ளார். ஆனால் தனுஷிடம், உன் பெற்றோர் நம் புதிய வீட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் இங்குஅடிக்கடி வரவும் கூடாது என ஐஸ்வர்யா கண்டிசன் போட்டதால்தான், ஒரு கட்டத்தில் தனுஷ் இனி ஐஸ்வர்யாவுடன் வாழவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக செவி வழி தகவல்கள் கிடைத்துள்ளன.





