அரசியல்வாதிகளில் முக்கிய ஆயுதமே வாய் கூசாமல் கட்சி மேடைகளில் பொய் பொய்யாக பேசி புளுகி தள்ளுவதுதான். அதையே பல ஆண்டுகளாக தமிழக மக்கள் அரசியல் மேடைகளில் பார்த்து பழகி இருக்கின்றனர். எந்த குறை சொன்னாலும் அதை அடுத்த கட்சிக்காரர் மீது பழியை போடும் தந்திரத்தை அன்று முதல் இன்று வரை அரசியல்வாதிகள் தாரக மந்திரமாக வைத்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பு வரை திமுக திமுக என்று குறை கூறிய குற்றச்சாட்டு எழுப்பிய தவெக தலைவர் விஜய், இப்போது தமிழக முதல்வராகி 5 மாதங்கள் ஆகப் போகிறது. இப்போதும் அவர் திமுக திமுக என்று அவர்களது ஆட்சியை தான் குறை சொல்கிறாரே தவிர, தவெக ஆட்சியமைந்த இந்த 5 மாதங்களில் அவர் முதல்வராக என்ன செய்தார் என்ற கேள்விக்கு பதிலே இல்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்னும் மக்கள் மத்தியில் பழைய டயலாக் பேசிக்கொண்டு இருக்கிறார். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக வந்திருக்கிறேன், உங்க அண்ணனாக உங்க தம்பியாக ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன் என்று பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு வரும் முதல்வர் விஜய் இதற்கு பல லட்சங்கள் செலவாகிறது. கோவையிலிருந்து தாராபுரம் செல்வதற்கு தனி ஹெலிகாப்டர் பயணம். இதற்கும் பல லட்சங்கள் செலவாகிறது. அந்த ஹெலிகாப்டர் தாராபுரத்தில் இறங்குவதற்கு லட்சக்கணக்கில் செலவழித்து ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி தனி விமானத்தில் சென்னையிலிருந்து கோவைக்கு வந்து கோவையிலிருந்து தாராபுரத்துக்கு தனி ஹெலிகாப்டரில் வந்து தாராபுரத்தில் மாட்டு வண்டியில் சில அடி தூரம் பயணித்து விட்டு, நான் எளிய மக்களில் ஒருவன் என்று பேசி விஜய் ஷோ காட்டுகிறார். உடனே அங்கு சுற்றியிருக்கிற கூட்டமும் அடடா விஜய் எவ்வளவு எளிய மனிதர் என்று கைதட்டி ஆரவாரம் செய்கிறது.
தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் விஜய்க்கு இமேஜ் இல்லாத நிலையில் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றி கேள்விக்குறிதான் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறிவிட்டது. எனினும் விஜய் தரப்பில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று டீக்கடையில் டீ குடித்து வயல் வெளியில் டிராக்டர் ஓட்டி, வேட்பாளரை மேடையில் கதறவிட்டும் மாட்டு வண்டி ஓட்டி கடைசியில் முருங்கை காய் வரை பறித்து விட்டு சென்றுள்ளார் விஜய். ஆனால் மக்கள் இதற்கெல்லாம் ஏமாறுவார்களா? என்பதற்கு வரும் 9ம் தேதி விடை தெரியும்.





