- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென சிவகார்த்திகேயன் செஞ்ச விஷயம், கடுப்பான நடிகர் தனுஷ், இதுதான் அவங்க மோதலுக்கே முதல் காரணம்...

திடீரென சிவகார்த்திகேயன் செஞ்ச விஷயம், கடுப்பான நடிகர் தனுஷ், இதுதான் அவங்க மோதலுக்கே முதல் காரணம் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோ தான் சிவகார்த்திகேயனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து சினிமா விருது விழாக்களையும் சிவகார்த்திகேயன் அவ்வப்போது தொகுத்து வழங்கினார். இதற்கிடையே இயக்குனர் பாண்டிராஜன் அவரை மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.

இந்த சூழலில் நடிகர் தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது நட்பாக மாறியது. தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் தனது நண்பனாக சிவகார்த்திகேயனை தனுஷ் நடிக்க வைத்தார். அடுத்து எதிர்நீச்சல் மற்றும் காக்கி சட்டை என சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 2 படங்களை நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரித்தார்.

- Advertisement -

அத்துடன் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவுடன் சேர்ந்து நடனமாடி சிவகார்த்திகேயனுக்கு பிரமோசன் செய்து கொடுத்தார். சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை என்ற அந்த பாடல் படத்துக்கு செமையாக ஹைப் தந்தது. இப்படி ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஆதரவு தந்தார்.

ஆனால் சமீபகாலமாக குறிப்பாக சிவகார்த்திகேயன் நட்சத்திர நடிகராக வளர்ந்த பிறகு தனுஷூக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இணைய கூலிப்படைகள் மூலமாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, தயாரிப்பாளராக நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனுக்காக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். முதலில் கொடுத்த சம்பளத்தை வாங்கிய சிவகார்த்திகேயன் திடீரென்று ஒரு சம்பளத்தை அவரே பிக்ஸ் செய்தார். அப்போது தனுஷ் அவர் மேல் கோபப்பட்டார்.

நான் உனக்காக இவ்வளவு பண்ணும்போது நீ கரெக்டா ஒரு சம்பளம் பிக்ஸ் பண்றே? இவ்வளவு பெரிய சம்பளத்தை என் கம்பெனி கொடுக்க முடியாது. நீ கேட்கிற சம்பளம் கொடுக்கிற பெரிய கம்பெனியை போய் பாருன்னு சொல்லி விடுகிறார். இப்படி ஆரம்பிச்ச பிரச்னை தான் அவங்களுக்குள்ள என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். அதன் பிறகு இப்போது தனுஷை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்