இப்போதைய தமிழ் சினிமாவில் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான். சில மாதங்களுக்கு முன் மண்ணாங்கட்டி படத்தில் நடிக்க கமிட் ஆன அவரை படக்குழு, கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு மலை கிராமத்துக்கு ஷூட்டிங்குக்கு அழைத்தது.
அப்போது அவ்வளவு தூரம் எல்லாம் என்னால் முடியாது. வேண்டுமென்றால் அந்த மலைகிராமத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டை, சென்னையில் ஷெட் ஆக போடுங்கள். அங்கு வந்து நடிக்கிறேன், என கறாராக சொல்லி இருக்கிறார். படக்குழுவும் வேறுவழியின்றி கொடைக்கானலில் மலைகிராமம், எஸ்டேட் செட்டை, பல கோடி ரூபாய் செலவில் சென்னையில் உருவாக்கி, அங்கு வந்து நடித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, அன்னபூரணி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னால் கண்ணீர் விட்டு அழுவது போன்ற காட்சிகளில் நடிக்க முடியாது. கிளிசரின் போட்டு அழுது நடித்தால், என் முக அழகு கெட்டுவிடும். அதை விஎப்எக்ஸ் மூலம், நான் அழுமாறு காட்டிக்கொள்ளுங்கள் என்று கூறி, படக்குழுவினரை ஷாக் அடைய வைத்திருக்கிறார்.
எவ்வளவோ பெரிய ஸ்டார்களை பார்த்த தமிழ் சினிமா, நயன்தாரா போன்ற பலரை பார்த்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் இப்போது அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது என்பது தமிழ் சினிமாவில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
நயன்தாராவின் கணவர் இயக்கும் எல்ஐசி படத்தில், முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. இப்போது அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது. அதே போல், லேபிள் வெப் சீரிஸை இயக்கிய அருண் காமராஜ் படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்த படத்தில் இருந்தும் நயன்தாரா இப்போது விலகி விட்டார். இப்போது மண்ணாங்கட்டி என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.
இந்தியில் நடித்த ஜவான் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவரது 75வது படம் அன்னபூரணியும் அவரை பகிரங்க மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. எல்ஐசி படமும், லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற பெயருடன் அதுவும் ஒரு பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி தொடரும் பிரச்னையால், நயன்தாராவின் கோலிவுட் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா, என ரசிகர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





