- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளா போலீசார் அதிரடி; கூலி பட நடிகர் திடீர் கைது - அட மஞ்சும்மெல் பாய்ஸ்...

கேரளா போலீசார் அதிரடி; கூலி பட நடிகர் திடீர் கைது – அட மஞ்சும்மெல் பாய்ஸ் படத்துல இவர்தானப்பா ஹீரோ?

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சௌபிர் சாஹிர். பிரேமம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அவர் மலையாளத்தில் அறிமுகமானவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமானார். சிதம்பரம் எஸ் பொதுவா இயக்கிய இந்த படத்தை சௌபிர் சாஹிர்தான் தயாரித்தும் இருந்தார்.

மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு பிக்னிக் வரும் 10 நண்பர்களில் ஒருவர் குணா குகையில் அதல பாதாளத்தில் தவறி விழுந்து விடுவார். சாத்தான் சமையலறை என அழைக்கப்படும் அந்த பாதாள சுரங்கத்தில் விழுந்த யாரும் அதுவரை திரும்பி வந்தது இல்லை. ஆபத்தான அந்த சுரங்கத்துக்குள் சுபாஷ் என்பவர் தவறி விழுந்து விடுவார்.

- Advertisement -

அவரை காப்பாற்ற அவருடன் வந்த மற்ற நண்பர்கள் போராடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியைப் பெற்றது. இதில் தமிழ் நடிகர்களும் சிலர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இருந்து கண்மணி அன்போடு பாடல் இடம்பெற்று மிகப்பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

மஞ்சும்மெல் பாய் மலையாளம் தமிழ் கலந்த மொழிப்படம் என்பதால் தமிழ்நாடு கேரளாவில் பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பில் நடந்த பண மோசடி புகாரில் நடிகர் சௌபிர் சாஹிர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

லாபத்தில் 40 சதவீதம் தருவதாக கூறி 7 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கோர்ட்டில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சௌபிர் சாஹிர் உட்பட 3 பேர் மீது கேரளா மரடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என எர்ணாகுளம் கோர்ட்டில் 3 பேரும் மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் மூவருக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மரடு காவல் நிலையத்தில் சௌபிர் சாஹிர் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் அடிப்படையில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் சௌபிர் சாஹிர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்