வரும் தீபாவளிக்கு மூன்றே மூன்று திரைப்படங்கள்தான் தமிழ் சினிமாவில் வெளியாகின்றன. இதில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் பைசன் திரைப்படம் ஒன்று. சீயான் விக்ரமின் மகன் துருவ் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் பசுபதி லால் அமீர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வருகிறார்.
இதேபோல் ஹரிஷ் கல்யாணத்துக்கு டீசல் திரைப்படம் வெளியாக, பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படமும் லிஸ்டில் இருக்கிறது. மமீதா பைஜூ இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சரத்குமார் மற்றும் ரோகினி ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்தவர். அவரின் அறிமுக திரைப்படமாக டியூட் உருவாகி இருக்கிறது. சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான, ஊறும் பிளட் பாடல் ஹிட் அடித்தது. அதிலும் என் மூச்சு அவ, பேச்சு அவ வரிகள் இளைஞர்களை முணுமுணுக்க வைத்தன.
அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான முன்னோட்டமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அந்த ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிந்தது. வரும் 17ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் ஈடுபட்டு வருகிறது.
மைத்ரி மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பதால் தெலுங்கிலும் ப்ரோமோஷன் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் சூழலில் அதில், பிரதீப் ரங்கநாதன் மமீதா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு படத்தை பிரமோஷன் செய்தனர். அப்போது மமீதா பைஜூ, பிரதீப் ரங்கநாதனை பார்த்து மிகவும் டேஞ்சரான பையன், கேடி என்று கூறினார்.
தனது முந்தைய திரைப்படங்களில் கெட்ட பையனாக நடித்திருப்பதால் அவர் இப்படி சொல்வதாக பிரதீப் ரங்கநாதன் கூறினார். தொடர்ந்து நாகார்ஜுனா பிரதீப் ரங்கநாதனை பாராட்டினார். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினிகாந்த் வந்ததால் திரைத்துறை மாறியது. சில பத்து ஆண்டுகளுக்குப் பின் தனுஷ், சிலவற்றை மாற்றினார். இனி அடுத்த 10 ஆண்டுகளில் நாம் பிரதீப் ரங்கநாதனை பார்ப்போம் என்று புகழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





