- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிகண்டன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்... மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்...

மணிகண்டன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்… மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் மணிகண்டன். ஆரம்பத்தில் குறும்படங்களில் மட்டும் நடித்து வந்த அவருக்கு வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்தது. காதலும் கடந்து போகும் திரைப்படத்தில், முரளி எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இறுதிக் காட்சியில், அவருடன் விஜய் சேதுபதி பேசும் வசனம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று கவனம் ஈர்த்தார் மணிகண்டன். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் படத்திற்கு வசனகர்த்தாவாகவும் மணிகண்டன் செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

விக்ரம் வேதா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் வசனம் என்றும் கூறலாம். அதில் மிகப்பெரும் பங்களித்த மணிகண்டனை பலரும் பாராட்டினர். இங்கிருந்து அவரது திரையுலக பயணம் உயர ஆரம்பித்தது. காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து பிரபலம் அடைந்த மணிகண்டன், பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அவரது திரையுலக பயணத்தில் திருப்பி போட்ட திரைப்படம் ஆக ஜெய் பீம் திரைப்படம் அமைந்தது. அதில் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவனாகவே, தன்னை மாற்றிக் கொண்டு மணிகண்டன் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவர் அறிமுகமானார்.

- Advertisement -

நல்ல ஒரு பீல் குட் திரைப்படமாக அமைந்த குட் நைட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. மணிகண்டனுக்கு நல்ல ஒரு தொடக்கமாக இந்த திரைப்படம் அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்ததாக லவ்வர் எனும் திரைப்படத்தின் மணிகண்டன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வழியாக நல்ல வரவேற்பை பெற்றது. வரும் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் லவ்வர் படத்தை பார்த்துவிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பாராட்டியதாக மணிகண்டன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நீங்கள் எங்கள் படத்தை விரும்பி ரசித்தீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் போன்ற வரவிருக்கும் கலைஞர்கள் பாராட்டப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் சுவாரஸ்யமான பாத்திரங்களை ஆராய இது எனக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்