- Advertisement -
Homeபொழுதுபோக்குதேமுதிக அலுவலகத்தில் நடந்த அந்த சம்பவம் - நடிகர் மன்சூர் அலிகான் இப்படி சொல்லிட்டாரே?

தேமுதிக அலுவலகத்தில் நடந்த அந்த சம்பவம் – நடிகர் மன்சூர் அலிகான் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலில் மருத்துவமனையில் இருந்து சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின் கூட்டம் அதிகரித்ததால் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கும் ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரித்த நிலையில், மறுநாள் காலை சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை பார்த்து பார்த்து பலரும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

- Advertisement -

இந்நிலையில் 28ம் தேதி இரவு, தேமுதிக அலுவலகத்தில் வைத்திருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேரில் வந்தார், கண்ணீர் விட்டு அழுதபடி விஜயகாந்த் உடல் அருகே சில நிமிடங்கள் நின்ற விஜய், பின்பு பிரேமலதா, சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரிடம் துக்கம் விசாரித்துவிட்டு சென்றார்.

விஜய் காரில் ஏறிய போது, அவரது காரை நோக்கி செருப்பு ஒன்று பறந்து வந்தது. அதைப்பிடித்த ஒருவர் அப்படியே செருப்பு வந்த பக்கமே திருப்பி வீசினார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில், சரக்கு படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மன்சூர் அலிகானிடம், இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது மன்சூர் அலிகான், திட்டமிட்டு யாரும் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை. கூட்டத்தில் இருந்த யாரோ தான் அதை செய்துவிட்டனர். பல பேர் வந்து போகக்கூடிய ஹைவே பகுதியாக இருப்பதால் யாரென தெரியவில்லை, யாரோ விஷமிகள்தான் இதை செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம், விருப்பு, வெறுப்பு அடிப்படையில் நடந்த விஷயம் அல்ல. அப்படி நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் கூடாது. விஜயகாந்த் மீது விஜய் பேரன்பு கொண்டவர். கேப்டனுடன் விஜய் நடித்தவர். கேப்டனால் விஜய் வளர்த்து விடப்பட்டவர். அதனால், இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. விஷமிகள் யாரோ வேண்டுமென்றே இதை செய்திருக்கின்றனர் என கூறியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

- Advertisement -

சற்று முன்