நடிகர் விஜய் மனைவி சங்கீதா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். தனது கணவருக்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதால் அவரிடம் இருந்து பிரிய விரும்புவதாகவும் அதில் சங்கீதா கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மே 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதுதான் இப்படி ஒரு வழக்கு தவெக தலைவர் விஜய் மீது அவரது மனைவி தாக்கல் செய்திருப்பதே வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் சங்கீதா மனுவில் குறிப்பிட்டிருந்த அந்த நடிகை யார் என்று மக்கள் சந்தேகித்த நிலையில் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரு தயாரிப்பாளரின் இல்ல திருமண விழாவில் ஜோடியாக வந்து கலந்துக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவும் பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.
இந்த சூழலில் கடந்த மே 20ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஜூன் 15ம் தேதி அதாவது இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக முதல்வராகி விட்டார். நடிகை திரிஷாவுடன் அவரது நட்பு வழக்கம் போல் தொடர்கிறது.
சமீபத்தில் கூட நடிகர் அஜீத்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் வந்த போது அவருடன் நடிகை திரிஷாவுடன் வந்ததாக தகவல் பரவியது. அந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. ஆனால் கடந்த சில நாட்களாக விஜய் சங்கீதா இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது. இருவரும் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைய உள்ளதாகவும் ஒரு தகவல் வைரலானது.
இந்த சூழலில் இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் சங்கீதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் விஜய் சங்கீதா இருவரும் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்ஸிங் விசாரணைக்கு அனுமதி இல்லை என்று கோர்ட் நிராகரித்த நிலையில் இந்த வழக்கு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.





