- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமன்னன் படத்துக்கு பின் மீண்டும் வடிவேலு பகத் பாசில் இணைந்து திரையில் தோன்றும் மாரீசன் -...

மாமன்னன் படத்துக்கு பின் மீண்டும் வடிவேலு பகத் பாசில் இணைந்து திரையில் தோன்றும் மாரீசன் – படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

- Advertisement -

மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் பாசில். தமிழில் பூவே பூச்சூடவா பூவிழி வாசலிலே வருஷம் 16 காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களை பாசில் டைரக்ட் செய்திருக்கிறார். அவரது மகன் பகத் பாசில். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது மனைவி நஸ்ரியா, தமிழில் ராஜா ராணி நய்யாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் பகத் பாசில். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தொடர்ந்து கமலுடன் விக்ரம் படத்திலும் ரஜினியுடன் வேட்டையன் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வில்லன் கேரக்டரில் வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் ரத்னவேலு கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

- Advertisement -

மாமன்னன் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர்கள் வடிவேலு பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வி கிருஷ்ணமூர்த்தி கதை திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். மேலும் அவர் கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றி உளளார்.

மாரீசன் படத்தில் நடிகர்கள் வடிவேலு பகத் பாசில் ஆகியோருடன் கோவை சரளா விவேக் பிரசன்னா சித்தாரா பிஎல் தேனப்பன் லிவிங்ஸ்டன் ரேணுகா சரவணா சுப்பையா கிருஷ்ணா ஹரிதா டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

கிராமிய பின்னணியில் டிராவலிங் திரில்லராக மாரீசன் படம் உருவாகி இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி மாரீசன் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாரீசன் படம் குறித்து முக்கிய அப்டேட் இப்போது வெளியாகி உள்ளது. வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் மாரீசன் படம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் படத்துக்கு பின் வடிவேலு பகத் பாசில் கூட்டணி மீண்டும் மாரீசன் படத்தில் இணைந்திருப்பதும் இந்த படத்தில் டீசரில் இருவரும் மிக அற்புதமான நடித்திருப்பதும் படத்துக்கு ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்