- Advertisement -
Homeபொழுதுபோக்கு“ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களாடா?” மாரி செல்வராஜின் அனல் பறக்கும் வசனங்கள்,  வெளியானது மாமன்னன் படத்தின் அட்டகாசமான...

“ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களாடா?” மாரி செல்வராஜின் அனல் பறக்கும் வசனங்கள்,  வெளியானது மாமன்னன் படத்தின் அட்டகாசமான டிரைலர்

- Advertisement -

வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமன்னன்”. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

மாரி செல்வராஜ் இதற்கு முன் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் சாதிய ஏற்றத்தாழ்வை கடுமையாக சாடியிருந்தது. அதே போல் “மாமன்னன்” திரைப்படமும் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து உருவாகும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் டைட்டில் கதாப்பாத்திரமான “மாமன்னன்” கதாப்பாத்திரத்தில் வடிவேலுவே நடித்துள்ளார்.

இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினிந் கடைசி திரைப்படமாகும். சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் வடிவேலு தனது வாழ்க்கையில் முன்னேறினால் எப்படி இருக்குமோ அதுவே மாமன்னன் வடிவேலு கதாப்பாத்திரம் என்று கூறியிருந்தார். மாரி செல்வராஜ் இவ்வாறு கூறியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

இந்த நிலையில் “மாமன்னன்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. வடிவேலு மாமன்னன் கதாப்பாத்திரத்தில் மிகவும் வித்தியாசமாக தென்படுகிறார். இதுவரை வடிவேலு நடித்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாப்பாத்திரம் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிய வருகிறது. மேலும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கதைக்களத்திற்கு ஏற்றார் போல் மிகவும் ரௌத்திரமாக வலம் வருகிறார்கள்.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயிருக்கிறார்கள். மாரி செல்வராஜ் தன்னுடைய பாணியிலேயே மிக சிறப்பாக இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் என டிரைலரை பார்க்கும்போது தெரிய வருகிறது. இத்திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது “மாமன்னன்” திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

 

 

சற்று முன்