- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்கு பார்த்தாலும் பாசிட்டிவ் விமர்சனம்... முன்பதிவில் முந்தும் மகாராஜா... நீண்ட நாட்களுக்குப் பிறகு சிக்ஸர் விளாசிய...

எங்கு பார்த்தாலும் பாசிட்டிவ் விமர்சனம்… முன்பதிவில் முந்தும் மகாராஜா… நீண்ட நாட்களுக்குப் பிறகு சிக்ஸர் விளாசிய விஜய் சேதுபதி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்களுக்கும் மிக முக்கியமான தருணம் என்பது தங்களின் 25 ஆவது ஐம்பதாவது திரைப்படங்கள்தான். இது போன்ற சமயங்களில், கதை தேர்வை கச்சிதமாக எடுத்து அதை வெற்றி படமாக்கும் முயற்சியில் நடிகர்கள் ஈடுபடுகிறார்கள். என்னதான் அவர்கள் முன்னெடுப்பை எடுத்தாலும் ரசிகர்களின் மனதில் அந்த திரைப்படம் இடம் பிடித்ததா என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டும்.

 

இந்த வரிசையில் தளபதி விஜய்க்கு 25 மற்றும் 50 வது திரைப்படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அவர் தனது 25 வது திரைப்படம் ஆக கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞராக அவர் நடித்த அந்தத் திரைப்படம் தோல்வியை தழுவியது.

 

விஜய்யின் ஐம்பதாவது திரைப்படமான சுறா பற்றி நாம் இங்கு சொல்ல தேவையில்லை. அதே சமயம் அஜித்திற்கு 25வது திரைப்படமாக அமர்க்களம் மற்றும் 50-வது திரைப்படமாக மங்காத்தா என இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன. இப்படி ஒவ்வொரு நடிகர்களுக்கும், பட வரிசைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இதில்தான் தற்போது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக அதிக திரைப்படங்களில் நடித்த அவர், விரைவாக ஐம்பதாவது திரைப்படத்தை எட்டி இருக்கிறார். இவரின் 25 ஆவது திரைப்படமாக வெளியான சீதக்காதி படு தோல்வியை சந்தித்தது.

 

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா உருவாகி இருக்கிறது. குரங்கு பொம்மை திரைப்படத்தை எடுத்து பலரது கவனத்தை ஈர்த்த நிதிலன் சுவாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனுராக் காஷ்யப், நட்டி, மம்தா மோகன் தாஸ், அபிராமி, முனிஸ்காந்த் என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லரே ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகும் நிலையில், பிரஸ் ஷோ நேற்று வெளியிடப்பட்டது. இதில் பலரும் யூகித்ததைப் போலவே மகாராஜா திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியின் கடைசி 20 நிமிடங்கள் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டியுள்ளனர். ஒருவர் கூட படத்தில் எந்த ஒரு காட்சியிலும் குறை சொல்லவில்லை. சமூக வலைதளங்களில் மகாராஜா பாராட்டு மழையில் நனைவதால், படத்திற்கான முன்பதிவு அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக திருப்புமுனையை இந்த திரைப்படம் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

 

சற்று முன்