- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் தனுஷ் இணைகிற படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - அப்படி ஒரு...

மாரி செல்வராஜ் தனுஷ் இணைகிற படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – அப்படி ஒரு அதிரடி முடிவுக்கு வந்தாரா இயக்குனர்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை என அவர் இயக்கிய 4 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக பெரிய வரவேற்பை வசூலை அள்ளிய நிலையில் அடுத்ததாக அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் இப்போது நடித்து வருகிறார். தொடர்ந்து டி 56 என்ற படத்தில் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய 2வது படம் கர்ணன் படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். இது மாரி செல்வராஜ் தனுஷ் இணைகிற 2வது படமாக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

முதன்முறையாக நடிகர் தனுஷ் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இது உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 150 கோடியாக உள்ளது. இந்த படத்தின் திரைக்கதை மற்றும் கதைக்களம் வரலாற்று பின்னணியை கொண்டதாக இருப்பதால் மிகப்பெரிய பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

- Advertisement -

இந்த படத்துக்காக நடிகர் தனுஷ் 6 மாதங்கள் வரை கால்ஷீட் தந்திருக்கிறார். அவர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மேல் கால்ஷீட் தராத நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் என்பதால் 6 மாதங்கள் வரை தேதி ஒதுக்கி தந்திருக்கிறார். மேலும் இந்த படத்துக்காக தனது சம்பளத்தை ரூ. 15 கோடியாக இயக்குனர் மாரி செல்வராஜ் குறைத்துக்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

வழக்கமாக தனது படங்களில் தனது கொள்கைகள், சாதிய கோட்பாடுகள் சமுதாய குறைபாடுகள் மனித உரிமைகள் குறித்து பேசும் விஷயங்களை மாரி செல்வராஜ் வைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அதுபோன்ற எந்த கொள்கை சார்ந்த விஷயங்களையும் கொண்டு வராமல், ரசிகர்கள் விரும்பும் ஒரு திரைப்படமாக மட்டுமே இந்த படத்தை அவர் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதனால் இந்த படத்துக்கு வழக்கமான எதிர்மறை விமர்சனங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்