- Advertisement -
Homeபொழுதுபோக்குமதகஜ ராஜா படம் தந்த அபார வெற்றி, சுந்தர் சி - விஷால் கூட்டணி எடுத்த...

மதகஜ ராஜா படம் தந்த அபார வெற்றி, சுந்தர் சி – விஷால் கூட்டணி எடுத்த அதிரடி முடிவு – அப்போ அந்த வரிசையில் இதுவும் சேரப் போகுதா?

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த படம் விடாமுயற்சி. ஆனால் டிசம்பர் 31ம் தேதி இரவு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க அறிக்கை வெளியிட்ட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்ற குண்டையும் தூக்கி போட்டது.

இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் கடுமையான விரக்தியடைந்தனர். இப்போது சென்சார் தணிக்கை முடிந்துள்ள நிலையில், விடாமுயற்சி படம் வருகிற 23ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட்பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறியதால் பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி ரிலீஸான வணங்கான் கேம் சேஞ்சர் படங்களை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இன்று விஷ்ணுவர்தன் நடிப்பில் ஆகாஷ் அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா, ஜெயம் ரவி நித்யாமேனன் நடித்த காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.

இதில் 12 ஆண்டுகளுக்கு முன் உருவான மதகஜ ராஜா படம், நிதி பிரச்னை கடன் பிரச்னை காரணமாக திரைக்கு வராமல் முடங்கிப் போன நிலையில், இப்போது திரைக்கு வந்துள்ளது. முதல் நாளில் ரூ. 3 கோடி, 2வது நாளில் ரூ. 8 கோடி வசூலை கடந்துள்ளது. காமெடி காதல் ஜானரில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்தும் பெரிய வெற்றியை பெறாத நடிகர் விஷாலுக்கு மதகஜ ராஜா கம்பேக் படமாக அமைந்துள்ளது. அதனால் மீண்டும் விஷால் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விஷால் நடிப்பில் இரும்புத்திரை 2 துப்பறிவாளன் 2 மார்க் ஆண்டனி 2 படங்கள் உருவாக திட்டமிட்டுள்ள நிலையில், மதகஜ ராஜா படமும் 2ம் பாகமாக உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சந்தானம் காமெடி ரோலில் நடித்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், இது வேறு புதிய கதையில் உருவாகும் படமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்