- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட அட.. காஷ்மீரில் த்ரிஷா இப்படியும் இருந்திருக்காங்களா.. லியோ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதுதான்

அட அட.. காஷ்மீரில் த்ரிஷா இப்படியும் இருந்திருக்காங்களா.. லியோ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதுதான்

- Advertisement -

பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களின் நெகட்டிவ் விமர்சனத்துக்கு பிறகு மிகப்பெரிய நம்பிக்கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்தார் விஜய். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

ரஜினியுடன் நேரடி போட்டிக்கு தங்கள் தளபதியை ரசிகர்கள் நிறுத்தியதால் இந்தப் படத்தின் மீதான அதீத ஆர்வத்துடன் திரையரங்குக்கு கடந்த 19ஆம் தேதி சென்றனர். படம் விஜய் ரசிகர்களுக்கு ரொம்பவே திருப்தியாக இருந்தது. ஆனால் பொதுவான ரசிகர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை. மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கமா இது என சந்தேகப்படவும் செய்தனர்.

- Advertisement -

விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்த லியோ முதல் வாரத்தில் 461 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் ஜெயிலர் படம் முதல் வாரத்தில் 450 கோடி ரூபாய் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் லியோ படம் ஜெயிலரை பீட் செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம், பாசிட்டிவ் விமர்சனம் என சொன்னவர்கள் மத்தியில் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால் அது விஜய் – த்ரிஷாவின் கெமிஸ்ட்ரிதான். ஏனெனில் கோலிவுட்டில் எவர்க்ரீன் ஜோடியாக இருவரும் இருந்தனர். கடைசியாக குருவி படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பிறகு லியோவில் நடித்திருக்கின்றனர். வருடங்கள் ஆனாலும் கெமிஸ்ட்ரி குறையவில்லை என புகழ்ந்தனர் ரசிகர்கள்.

- Advertisement -

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் த்ரிஷா பகிர்ந்திருக்கிறார். ஜில் ஜில் காஷ்மீரில் த்ரிஷா அவ்வளவு க்யூட்டாக இருக்கிறார். மேலும் சஞ்சய் தத், விஜய், லோகேஷ் கனகராஜ் என அனைவருடனும் ஜாலியாக புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் அழகு இன்னும் குறையல. காஷ்மீரைவிட த்ரிஷா அழகா இருக்காங்களே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

த்ரிஷா அடுத்ததாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு அதாவது பொன்னியின் செல்வனில் இருந்து த்ரிஷா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்