- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரன் வசூல் உண்மையில் எவ்வளவு... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

மாவீரன் வசூல் உண்மையில் எவ்வளவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

- Advertisement -

பிரின்ஸ் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த 14ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸின் தோல்வியால் இந்தப் படம் ஹிட்டாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் சிவகார்த்திகெயனும், அவரது ரசிகர்களும்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகியிருந்தாலும் ரசிகர்களுக்கு எளிதாக கனெக்ட் ஆகும்படி மடோன் அஸ்வின் இயக்கியிருந்ததற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் வித்தியாசம் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

குறிப்பாக எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் சிவா நடித்து வருகிறார் என்ற விமர்சனம் மாவீரன் மூலம் உடைந்திருக்கிறது. பயந்த சுபாவம் உள்ள இளைஞராகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் ஹீரோவாகவும் கலக்கியிருந்தார் எஸ்கே. மேலும் படத்தின் ஹைலைட்டாக இருந்தது விஜய் சேதுபதியின் குரல். கதைப்படி அந்த குரல் சொல்வதை சிவகார்த்திகேயன் கேட்கும்படி இருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.

ஒருபக்கம் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்க மறுபக்கம் வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. படம் வெளியானது ஒரு வாரத்திலேயே வசூலானது 50 கோடி ரூபாயை அசால்ட்டாக கடந்தது. இந்தச் சூழலில் மாவீரன் படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தெரியவந்திருக்கிறது. அதன்படி இதுவரை மாவீரன் 75 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் ஏற்கனவே நூறு கோடி ரூபாயை வசூலித்திருக்கின்றன. தற்போது மாவீரன் வெளியாகி 10 நாட்களிலேயே 75 கோடி ரூபாயை தொட்டிருப்பதால் விரைவில் இந்தப் படமும் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துவிடும் என்று எஸ்கே ரசிகர்கள் ஆணித்தரமாக கூறிவருகின்றனர். அப்படி நடக்கும்பட்சத்தில் மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில், போன முறை மிஸ் ஆகிடுச்சு இந்த முறை மிஸ் ஆகாது என சிவகார்த்திகேயன் சொன்னது உண்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாவீரன் படத்தின் கதை திருட்டு கதை என்ற சர்ச்சையும் எழுந்தது. அதாவது ப்ரியதர்ஷனின் உதவி இயக்குநர் பினு சுப்பிரமணியன் என்பவர் அப்பார்ட்மெண்ட் என்ற கதையை எழுதி அதை மண்டேலா ஒளிப்பதிவாளர் மூலம் யோகிபாபுவிடம் சொன்னதாகவும் அதுதான் மாவீரன் படமாக உருவாகியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து மாவீரன் படக்குழு இன்றுவரை மௌனம் சாதித்துவருகிறது.

- Advertisement -

சற்று முன்