- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா உங்க ஆளுதானே, அவர்கிட்ட போய் கேளுங்க- மாரி செல்வராஜின் தேவர் மகன் பேச்சு குறித்து...

இளையராஜா உங்க ஆளுதானே, அவர்கிட்ட போய் கேளுங்க- மாரி செல்வராஜின் தேவர் மகன் பேச்சு குறித்து கொந்தளித்த பிரபல நடிகர்

- Advertisement -

“மாமன்னன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “தேவர் மகன்” திரைப்படத்தை குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியது பல சர்ச்சைகளை உண்டு செய்தது. ஒரு பக்கம் மாரி செல்வராஜ் பேசியது மிகவும் சரியே என்று பலர் கூறினாலும் இன்னொரு பக்கம் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்த  நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன், மாரி செல்வராஜ் பேசியதை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழ் சினிமாவில் இது போன்று சாதியை குறித்து பேசுகின்ற திரைப்படங்கள் இதற்கு முன்பு வந்திருக்கின்றது. ஆனால் இயக்குனர் ரஞ்சித்தான் மிகப் பெரிய அடித்தளத்தை போட்டார். அதன் பின் மாரி செல்வராஜ் வந்த பிறகு அதிகமாக வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் படம் எடுப்பதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் அந்த வலியை பார்வையாளர்களுக்கு திணிக்க கூடாது.

இவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. வியாபார யுக்தி மட்டுமே. இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. மாரி செல்வராஜும் ரஞ்சித்தும் வியாபாரத்திற்காகத்தான் சினிமாவில் இருக்கிறார்கள். மாரி செல்வராஜ் போற்றிபாடடி பொண்ணே என்ற பாடலை குறை சொல்கிறார். அந்த பாட்டுக்கு மெட்டு போட்டது இளையராஜாதானே.

இளையராஜாவிடம் சென்று நீங்கள் ஏன் இந்த பாட்டுக்கு இசையமைத்தீர்கள் என்று கேட்கலாமே. அவர் அவர்களின் ஜாதிதானே, ஏன் இப்படி ஒரு பாடலை இசையமைத்தீர்கள் என்று இளையராஜாவிடம் சென்று கேட்கலாமே.

இளையராஜா அந்த பாடலை இசையமைத்தது காசுக்காகத்தான். அந்த படத்தில் அந்த சூழலுக்கு அந்த பாடல் தேவைப்பட்டது. அதை பாடலாசிரியர் எழுதுகிறார். இயக்குனர் அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று கேட்கிறார். அதில் என்ன தப்பு இருக்கு. மாரி செல்வராஜ் கமல்ஹாசனிடம் கேட்ட கேள்வியை இளையராஜாவிடம் கேட்க வேண்டியதுதானே” என்று மீசை ராஜேந்திரன் அப்பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்