தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமா இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியாக உள்ளது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக 6 மாதங்கள் வரை இருப்பதால் இப்போதைக்கு படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என்று நடிகர் விஜய் படக்குழுவினரிடம் கூறி விட்டார்.
ஏனென்றால் படம் குறித்த அப்டேட்டுகளை இப்போதே வெளியிட துவங்கினால், 6 மாதங்களுக்கு பிறகு ஜனநாயகன் படம் குறித்த விறுவிறுப்பே ரசிகர்களுக்கு இல்லாமல் போய்விடும். படம் வெளியாகும்போது எந்த சுவாரசியமும் ரசிகர்களுக்கு இருக்காது என்றும் விஜய் படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் வருகிற 22ம் தேதி நடிகர் விஜயின் 51வது பிறந்த நாளாகும். இந்த விசேஷ தினத்தில் ஜனநாயகன் படத்தில் இருந்து எந்த அப்டேடட்டும் வெளியாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. இது தளபதி ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்க தலைவரான விஜய், அன்று என்ன செய்யப் போகிறார் என்ற அறிவிப்புக்காக கட்சியினரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான படம் மெர்சல். இந்த படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். அட்லீ இயக்கிய படங்களில் மாஸ் ஹிட் படங்களில் மெர்சல் படமும் ஒன்று. இந்த படத்தில் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் எஸ்ஜே சூர்யா வடிவேலு கோவை சரளா உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டால் பிலிப்ஸ் தயாரித்த 100வது படம் மெர்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் வெற்றிமாறன், வெற்றி, மாறன் எனத மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் அதிக வசூல் செய்த படமாகவும் மெர்சல் படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மெர்சல் படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம் தேதி என்ற நிலையில், ஜூன் 20ம் தேதி மெர்சல் படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்த நாளில் அவரது சூப்பர் மாஸ் ஹிட் படமான மெர்சல் படம் ரி ரிலீஸாவது தளபதி ரசிகர்களை, தவெக கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.





