- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த துயர சம்பவம்… தவெக தலைவர் விஜய்க்கு அவப்பெயர் தந்ததா? ஆதரவை பெருகியதா? -...

கரூரில் நடந்த துயர சம்பவம்… தவெக தலைவர் விஜய்க்கு அவப்பெயர் தந்ததா? ஆதரவை பெருகியதா? – சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கினார். கட்சிக் கொடி கொள்கை பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்திய விஜய் அடுத்து விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையிலும் 2வது அரசியல் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார்.

விஜய் பங்கேற்கும் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் என்றாலே மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. கோவையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திற்கும் வந்த விஜய்க்கு ரோடு முழுவதும் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். மேலும் கடந்த 13ம் தேதி முதல் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

முதல் வாரத்தில் திருச்சி அரியலூர் மாவட்டங்களிலும் 2வது வாரத்தில் நாகை திருவாரூர் மாவட்டங்களிலும் 3வது வாரமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார். கரூரில் கடந்த 27ம் தேதி இரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலத்த அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து நடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. போலீஸ் தரப்பிலும் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில நிர்வாகிகள் கைது செய்யப்பட இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் ஆளுங்கட்சி திமுக நடிகர் விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் பலர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக கரூர் பொதுக்கூட்டத்தில் பாட்டிலுக்கு 10 ரூபா பாட்டிலுக்கு 10 ரூபா என நடிகர் விஜய் முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜியை கிண்டலடித்து பாடிய பிறகுதான் மின்தடை ஏற்பட்டது. விஜய் மீது செருப்புகள் வீசப்பட்டது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்துக்குள் வந்தன என பலவிதமான புகார்களை சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். அவர்களே கூட்டத்தில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை வரவேற்பை சீர்குலைக்கவே திட்டமிட்டு ஆளுங்கட்சி தரப்பில் இப்படி ஒரு சதிதிட்டத்தை செய்துவிட்டனர் என்றும் யூடியூப்பர்கள் சிலர் பேசிய நிலையில் வீண் வதந்தி பரப்பியதாக அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வீடியோ வெளியிட்ட விஜய், நடந்த அனைத்து உண்மைகளும் மக்களுக்கு தெரியும் என்றும் கூறியிருப்பது வைரலாகி உள்ளது. அதனால் கரூர் சம்பவம் விஜய்க்கு தந்தது அவப்பெயரா அல்லது அவரது ஆதரவை பெருக்கியதா என்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்