- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் எம்ஜிஆர்… சுடச்சுட வெளியான தகவல், பாடல் காட்சியில் நடனமாடும் இசையமைப்பாளர் -...

ஜனநாயகன் படத்தில் எம்ஜிஆர்… சுடச்சுட வெளியான தகவல், பாடல் காட்சியில் நடனமாடும் இசையமைப்பாளர் – தரமான சம்பவங்கள் லோடிங்…

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் அரசியல்வாதியாக அவர் பலர் ஏற்கலாம். சிலர் ஏற்க மறுக்கலாம். ஆனால் நடிகராக விஜயை கொண்டாடும் மக்கள்தான் இதில் அதிகம். அரசியலுக்கு விஜய் வந்தாலும், அவ்வப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் விஜய் படங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் குழந்தைகள் விரும்பும் ஒரு நடிகராக விஜய் இருக்கிறார். எம்ஜிஆர் விஜயகாந்த் ரஜினிகாந்துக்கு பிறகு பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக வருவது விஜய் நடித்த படங்களுக்கு தான். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக உள்ளனர்.

- Advertisement -

இந்த சூழலில் ஜனநாயகன் படம்தான் விஜயின் அடுத்த படமாக வருகிற ஜனவரி மாதம் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இது அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தின் தமிழ் ரீ மேக்தான் ஜனநாயகன் என்றும் கூறப்படும் நிலையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பகவந்த் கேசரி படத்தில், ஹீரோ பாலகிருஷ்ணாவை காட்டும்போது அவர் ஜெயிலில் இருப்பது போலவும் ஒரு சுவரில் வரையப்பட்ட சிங்கத்தை காட்டிய பிறகு சிறைக்குள் இருக்கும் பாலகிருஷ்ணவை காட்டியிருப்பார்கள். ஜனநாயகன் படத்திலும் விஜய் அறிமுக காட்சியில், சிறைக்குள் இருப்பது போல்தான் காட்டியிருக்கிறார்கள்.

- Advertisement -

அதே நேரத்தில் சிறை சுவரில் சிங்கத்துக்கு பதிலாக எம்ஜிஆர் உருவத்தை கைதி ஒருவர் வரைந்திருப்பார். அந்த எம்ஜிஆர் படத்தை காட்டிய பிறகு நடிகர் விஜய் சிறைக்குள் இருப்பது போல் காட்டியிருக்கிறார்கள் என தகவல் கசிந்துள்ளது. அரசியல்வாதியாக இருக்கும் விஜய், தனது படத்தில் எம்ஜிஆரை காட்டுவது மக்கள் மத்தியில் எம்ஜிஆரை தனது குருவாக ஏற்றுக்கொண்டதை காட்டும் நோக்கம்தான்.

சமீபத்தில் நடந்த மதுரை தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், சினிமாவிலும் அரசியலிலும் எனக்கு பிடித்தவர் எம்ஜிஆர்தான். அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றார். மேலும் எம்ஜிஆரின் புகைப்படத்தை தனது ஜனநாயகன் படத்தில் வைத்திருக்கிறார். அத்துடன் ஜனநாயகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் தோன்றி பாடல் காட்சி முழுவதும் நடனமாடியிருக்கிறார் என்ற லேட்டஸ்ட் அப்டேட்டும் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்