- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டுதோறும் அந்த ஒரு நாளில் மட்டும் மௌனவிரதம் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - அட...

ஆண்டுதோறும் அந்த ஒரு நாளில் மட்டும் மௌனவிரதம் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் – அட இந்த விஷயம் எம்ஜிஆர் பக்தர்களுக்கே தெரியாதே…?

- Advertisement -

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் என்று அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் வரிகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய பாடல் வரிகள் இன்று வரை அவருக்கு மட்டுமே பொருத்தமான வரிகளாக இருந்து வருகின்றன.

இந்த மண்ணுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் புகழ் மக்கள் மத்தியில் சிறிதளவும் குறையவில்லை மறையவில்லை மாறவில்லை என்பதே இந்த பாடல் வரிகளுக்கு உதாரணமாக இருந்து வருகிறது. அந்தளவுக்கு மக்கள் மனம் கவர்ந்த நாயகராக தலைவராக வாழ்ந்து மறைந்தவர் எம்ஜிஆர்.

- Advertisement -

எம்ஜிஆர் திரைப்படங்களில் பிஸியாக நடித்த காலகட்டத்தில் அவருடன் பல படங்களில் நடித்தவர் எம்ஆர் ராதா. நடிகவேள் என்று அழைக்கப்படும் அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான படங்களில் வில்லன் கேரக்டரிலும் அவர் நடித்திருக்கிறார்.

அவர் நடித்த இரத்தக்கண்ணீர் படம் இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்து வருகிறது. எம்ஆர் ராதா பெரியார் கொள்கைகளை பின்பற்றியவர். அவரது நாடகங்களிலும் திரைப்பட வசனங்களிலும் அவ்வப்போது தனது பகுத்தறிவு கருத்துகளை சொல்லி விடுவார் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் எம்ஜிஆருக்கும் எம்ஆர் ராதாவுக்கும் ஒரு முறை ஏதோ பிரச்னை ஏற்பட்ட நிலையில் இருவரும் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் எம்ஜிஆரை தொண்டை பகுதியில் எம்ஆர் ராதா சுட்டு விட்டார். அதன்பிறகு அவர் தன்னையும் சுட்டுக்கொண்டார்.

இது தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை பதட்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் திலகம் எம்ஜிஆர், எம்ஆர் ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்ட நாள் 1967ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் எம்ஜிஆர் மௌன விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஏனெனில் இந்த சம்பவத்தில் எம்ஜிஆர் மறுபிறவி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்