- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 171 படத்தில் நடிக்கப் போறது மைக் மோகன் இல்லை; இந்த மாஸ் நடிகர் தான்...

ரஜினி 171 படத்தில் நடிக்கப் போறது மைக் மோகன் இல்லை; இந்த மாஸ் நடிகர் தான் என்பது உறுதி, போடு வெடிய – வெளியானது சீக்ரெட்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தசெ ஞானவேல் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது 171-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வரும் மே 1ஆம் தேதி, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை பெற்றவர். தொடர்ந்து விக்ரம், கைதி போன்ற படங்களும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படங்களாக அமைந்தன. ஆனால் மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் எதிர்பாத்த அளவுக்கு இல்லை என்றாலும், அந்தப் படங்களும் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தன என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், தனது ஆறாவது படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு கழுகு அல்லது ஈகிள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில், வரும் 22ஆம் தேதி அதாவது வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சத்யராஜிடம் இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசிய நிலையில், நேரில் வாங்க, கதையை சொல்லுங்க, கேரக்டர் பிடிச்சிருந்தால் கண்டிப்பா நடிக்கிறேன் என்று அவர் உறுதிமொழி தந்திருக்கிறார்.

ஆனால் இதுவரை லோகேஷ் கனகராஜ், சத்யராஜை நேரில் சந்திக்கவில்லை. நேரில் அவர் சந்தித்து பேசிய பிறகு சத்யராஜின் கேரக்டர் மற்றும் அவர் கேட்கும் சம்பளம் உள்ளிட்டவை அடிப்படையில் மட்டுமே இந்த படத்தில் சத்யராஜ் நடிப்பார் என்பது 100 சதவீதம் உறுதியாகும். ஏனெனில் ஏற்கனவே ரஜினிகாந்துக்கும் சத்யராஜுக்கும் மறைமுகமாக சில கருத்து வேறுபாடுகளும் இருப்பது கவனிக்கத்தக்கது/

அதே நேரத்தில் இந்த படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் மைக் மோகன் நிச்சயமாக இந்த படத்தை நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்கிறார். ஆனால் ரஜினிக்கு அவர் மகளாக நடிக்கவில்லை. வேறொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் மிக முக்கியமான லீடிங் ரோலில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பது உறுதியாகியுள்ளது. எனவே இந்த படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார் என்கிற ரகசிய தகவல் லீக்காகி உள்ளது.

சற்று முன்