- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா என்னமா இருக்கு ட்ரைலர்... அருண் விஜய் படத்தை பார்த்து அரண்டு போன ரசிகர்கள்... இந்தப்...

அடேங்கப்பா என்னமா இருக்கு ட்ரைலர்… அருண் விஜய் படத்தை பார்த்து அரண்டு போன ரசிகர்கள்… இந்தப் பொங்கலுக்கு செம கலெக்சன்தான் போல…

- Advertisement -

நடிகர் அருண் விஜய் ஆரம்பத்தில் இருந்தே ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு எதுவுமே கை கூட வில்லை. 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிளை தான் அவரது முதல் திரைப்படம். அங்கிருந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளி திரிந்த காலம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்த அருண் விஜய்க்கு ஒரு படம் கூட செட்டாகவில்லை.

நடுவே பாண்டவர் பூமி திரைப்படம் மட்டும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. ஆனால் அதுவும் அருண் விஜயை அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு அழைத்துச் செல்லவில்லை. இப்படியான சூழலில் 2009 ஆம் ஆண்டு வெளியான மலை மலை திரைப்படம், அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. வழக்கமான கதையில் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டாலும், சற்று விமர்சிக்கப்பட்டதால் அந்தப் படத்தின் மூலம் மெல்ல இருந்து வந்தார் அருண் விஜய்.

- Advertisement -

அருண் விஜயின் திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து, அஜித்திற்கு போட்டியாக படம் முழுக்க திரையில் ஒன் மேன் ஷோ காட்டினார் அருண் விஜய். அவருக்கு சரியான வாய்ப்பை கெளதம் மேனன் கொடுத்திருந்ததால், அருண் விஜயின் திரையுலக பயணம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

தொடர்ந்து, மகிழ் திருமேனியின் தடையறத் தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அருண் விஜய்க்கு வெற்றியை கொடுத்தன. குற்றம் 23 திரைப்படமும் அருண் விஜய்க்கு ஹிட் வரிசையில் அமைந்தது. ஒரு பாதியில் படு தோல்விகளையே பார்த்திருந்த அருண் விஜய்க்கு, தொடர்ந்து வெற்றி படங்கள் கிடைக்க ஆரம்பித்தன. கடைசியாக அவர் நடித்த, யானை திரைப்படமும் ஓரளவு பேசப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழலில் தற்போது அவர் இயக்குனர் ஏ எல் விஜய்யின் மிஷின் சாப்டர் 1 படத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க அயல் நாட்டில் வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம், பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் அயலான் திரைப்படம், 12ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் தனுஷ் மிரட்டலான லுக்கில் இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படியான சமயத்தில் அருண் விஜய் எதற்கு படத்தை ரிலீஸ் செய்கிறார் என பலர் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது. நிமிஷா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர், பலரும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ட்ரெய்லர் நன்றாக இருப்பதால் நிச்சயம் இது அயலான், கேப்டன் மில்லர் திரைப்படத்துடன் போட்டி போடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்