திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்னரும் கல்வி கட்டண தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித் தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆர்டிஐ மூலம் உறுதி ஆகியுள்ளது. மீதமுள்ள மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால் இனி இந்த திட்டத்தை நம்பி எப்படி மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்வி கனவை நோக்கி உழைப்பார்கள்? திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை சிதைப்பதில் தவெக அரசுக்கு ஏன் இத்தனை வெறி? சமூக நலத்துறை பெயரில் சேர்த்த சமூக நீதியை நடைமுறையில் காண முடியவில்லை என்று முக ஸ்டாலின் அதில் கூறியிருக்கிறார்.





