- Advertisement -
Homeபொழுதுபோக்குதனி ஒருவன் 2 படம் ஷூட்டிங் எப்போது? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் மோகன் ராஜா -...

தனி ஒருவன் 2 படம் ஷூட்டிங் எப்போது? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் மோகன் ராஜா – வரும் ஆனா வராதுங்கற ரேஞ்சுல பேசியிருக்ககாரே?

- Advertisement -

நடிகர் ரவிமோகன் நடித்த படங்களில் மிக முக்கியமான மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்த படம் தனி ஒருவன். கடந்த 2015ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இதுவரை ரவிமோகன் நடித்த படங்களில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தனி ஒருவன். இந்த படம் அவருக்கு பெரிய அடையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வந்த நடிகர் ரவி மோகனுக்கு சொந்தக் கதையில் உருவான தனி ஒருவன் படம் திருப்பு முனையை தந்தது. குறிப்பாக இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

தனி ஒருவன் படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து தனி ஒருவன் 2ம் பாகத்துக்கான அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வீடியோவாக வெளியானது. ஆனால் இன்னும் அந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்படவில்லை. ஆனால் நடிகர் ரவிமோகன் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வருகிறார்.

இதை பார்த்த விரக்தியடையந்த ரசிகர்கள் பலரும், பேசாமல் தனி ஒருவன் 2 படம் எடுத்தால் ரவி மோகனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். இப்போது நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் துவங்கிவிட்டார். அவரே தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார். மேலும் படங்களை டைரக்ட் செய்யவும் முன்வந்திருக்கிறார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தை முதன்முறையாக ரவி மோகனே டைரக்ட் செய்கிறார்.

ஆனால் அவரது அண்ணன் மோகன் ராஜா தான் தனி ஒருவன் படத்தின் டைரக்டர். ஜெயம் சந்தோஷ் சுப்ரமணியம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களை டைரக்ட் செய்வதும் மோகன் ராஜா தான். அதனால் தனி ஒருவன் 2 படத்தை அண்ணனும் தம்பியும் சேர்ந்து உடனடியாக உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளாகியும் இன்னும் தனி ஒருவன் 2 படம் உருவாகாமல் தாமதம் நீடிக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது, நாங்கள் இன்னும் தனி ஒருவன் 2 படத்துக்கான பட்ஜெட்டை நிர்ணயிக்கவில்லை. திரைக்கதையை கேட்ட பின்னர் தயாரிப்பு நிறுவனம் இப்போது இதற்கு சரியான நேரமில்லை. இந்த கதைக்கு நிறைய பட்ஜெட் தேவை. இன்னும் நமது தமிழ் சினிமா பெரிதாக வேண்டும் என்று கூறிவிட்டனர். அதனால் தனி ஒருவன் 2 தொடங்குவது தாமதமாகும். ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்று இயக்குனர் மோகன்ராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்