- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த மைக் மோகன், நீண்ட நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த...

அந்த படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த மைக் மோகன், நீண்ட நாட்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை – அந்த கேரக்டரே பிடிக்கலைன்னு சொல்லியிருக்காரே?

- Advertisement -

நடிகர் மோகன், கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர். அவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்றதால் அவருக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயரே உண்டு. அவர் நடித்த பல படங்களில் பாடகராக, மைக் பிடித்து பாடியதால் மைக் மோகன் என்ற பட்டப் பெயரும் உண்டு.

பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், மெல்லத் திறந்தது கதவு, இதயக்கோவில், தென்றலே என்னைத் தொடு, மௌன ராகம், விதி, பாடு நிலாவே, உயிரே உனக்காக, உதய கீதம், கோபுரங்கள் சாய்வதில்லை என பல வெற்றிப் படங்களில் நடித்தவர். மோகன் படங்கள் என்றால், தியேட்டர்களில் திருவிழா கூட்டமாக இருக்கும்.

- Advertisement -

மோகன் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களும், இசையும்தான். இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள், மோகனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. மேலும், நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் எஸ் என் சுரேந்தர் குரலும், மோகனின் நடிப்புக்கு மெருக்கேற்றியது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் மோகனுக்கு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு குறைந்து போனது. அப்போதும் அவருக்கு பல படங்களில் மற்ற கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் நடித்தால், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். அண்ணன், அப்பா, நண்பர் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் நடிகர் மோகன்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடிகர் மைக் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் வில்லன் கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லியோ படத்தில், நடிகர் மைக் மோகன் நடிக்க வைக்க டைரக்டர் முயற்சித்துள்ளார். நடிகர் அர்ஜூன் நடித்த கேரக்டரில் மோகனை நடிக்க அழைத்திருக்கிறார். ஆனால், அந்த கேரக்டருக்கு படத்தில் போதிய முக்கியத்துவம் இல்லை என, மைக் மோகன் லியோவில் நடிக்க மறுத்து விட்டார். அதன்பிறகுதான், அந்த கேரக்டரில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்துள்ளார். ஆனால் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் படத்தில், மைக் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்